• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காமராஜர் திறந்த பள்ளிக்கு ஏற்பட்ட அவலநிலை – கட்டடம் கட்ட முன்னாள் மாணவர் முன்வந்தும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

காமராஜர் திறந்த பள்ளிக்கு ஏற்பட்ட அவலநிலை – கட்டடம் கட்ட முன்னாள் மாணவர் முன்வந்தும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

அரசுப்பள்ளி

அரசுப்பள்ளி

பாதுகாப்பான பள்ளிக் கட்டடம் இல்லாததால் இப்பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்க அச்சப்படும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.

  • Share this:
    முன்னாள் முதலமைச்சர்  காமராஜர் திறந்து வைக்கப்பட்ட அரசுப் பள்ளி சிதிலமடைந்து இருப்பதால், பெற்றோர்கள் அச்சம், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிட்டது.புதிய பள்ளிக் கட்டடம் கட்டித் தரக் கோரி கடந்த ஆட்சி காலத்தில் பல முறை அரசிடம் கோரிக்கை வைத்தும் பலனளிக்காததால், முன்னாள் பள்ளி மாணவர் தனது சொந்த செலவில் சுமார் 60 லட்சம் மதிப்பில் ஒரு மாடி கட்டிடத்துடன் பள்ளிக் கட்டடம் கட்டித் தர தயராக இருந்தும். இரண்டு வருடமாக அரசு அனுமதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு.

    கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி 1962-ல் தமிழக முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் நேரில் வந்து திறந்து வைத்துள்ளார் .பள்ளியின் சுவர்கள் கருங்கற்களால் காற்று வசதியுடன் மர ஜன்னல்கள், மேற்கூரை ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்குறிச்சியை சுற்றி உள்ள கிராமங்களில் ஏழை, விவசாயிகளின் மாணவ மாணவிகளுக்கு வசதியாக அமைந்திருந்த இப் பள்ளியில், 6 முதல் 10 ஆம் வகுப்புகள் வரை சுமார் 450 முதல் 500 மாணவர்கள் வரை படித்துள்ளனர்.

    அரசுப்பள்ளி


    1962- ல் கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம்  தற்போது, உடைந்த நிலையில் பள்ளியின்  மேற்கூரையான ஒடுகளும்,  இடிந்த நிலையில் உள்ள சுவர்களால் வகுப்பறைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்து கிடக்கிறது.பாதுகாப்பான பள்ளிக் கட்டடம் இல்லாததால் இப்பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்க அச்சப்படும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடத்தால் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-ல் இருந்து படிப்படியாக குறைந்து,  தற்போது 138 ஆக எண்ணிக்கை குறைந்து விட்டது.

    அரசுப்பள்ளியின் அவலநிலை


    புதிய பள்ளிக் கட்டடம் கட்டித் தர பொதுமக்மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை.மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் ஏழை , எளிய மாணவ, மாணவிகள் பயன் பெறும் நோக்கத்தில் திறந்து வைக்கப்பட்ட  இப்பள்ளியில் படிந்த மாணவ, மாணவிகள் இன்று தொழில் துறை, மற்றும் உயர்ந்த பொறுப்புகளில் நல்ல பதவிகளில் இருந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கு வித்திட்ட இப்பள்ளி இன்று பொழிவு இழந்து சிதிலமடைந்து கிடக்கிறது. இதே நிலை நீடித்தால்,ஒரு சில ஆண்டுகளில்  பள்ளி இழுத்து மூடும் நிலை ஏற்படும்.

    அரசுப்பள்ளி


    பள்ளிக் கட்டத்தை கட்டித் தர கோரி பொதுமக்கள் வைக்கப்பட்ட கோரிக்கை கிடப்பில் போடப்பட்டதால், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் தோகை.முருகன் சொந்த செலவில் ஒரு மாடியுடன் சுமார் 60 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தர தயாராக இருந்து வருகின்றனர். இதற்கான அனுமதி கேட்டும் இன்று வரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்பள்ளியில் புதிய கட்டிடடம் கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளனர்.

    தோகை.முருகன்


    இதுகுறித்து முன்னாள் மாணவர் தோகை.முருகன் கூறியதாவது, என் குடும்பம் ஏழை குடும்பம், படிப்பதற்கு வழி இல்லாமல் இந்த பள்ளியில் எட்டு வருடங்களாக உணவு அருந்தி உயிருக்கு உத்திரவாதம் பெற்று படிப்பை முடித்து தற்போது நல்ல நிலைமையில் இருந்து வருகிறேன்.  என்னைப்போல் ஏழை மாணவர்கள் பயனடைய வேண்டும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது என்ற காரணத்துக்காகவே, நான் படித்து என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பள்ளிக்கு உதவி செய்ய வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    என்னைப்போல் ஏழை மாணவர்கள் பயனடைய வேண்டும். என ஏற்றுக்கொண்டு பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுப்பதற்காக முடிவு செய்து அனுமதி கேட்டு இரண்டு வருடங்களாக அரசு அதிகாரியிடம் போராடிக் கொண்டிருக்கிறேன். அனுமதி கொடுத்தால் 11 மாதங்களிவ் பணியை முடித்து கொடுத்து விடுவேன். இல்லை என்றால் தொடர்ந்து கால தாமதம் ஆனால் எனக்கு கூடுதல் செலவாகும். ஆகையால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து என் ஆசையை துவங்க உதவி செய்ய வேண்டும் என இருகரம் கூப்பி கேட்டுக்கொண்டார்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன் (கரூர்)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: