• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பத்தாயிரத்துக்கு சில்லறை கொடுங்க.. ரூ.500 வேண்டாம் ரூ.100 கொடுங்க - கரூரில் நூதன மோசடி மக்களே உஷார்

பத்தாயிரத்துக்கு சில்லறை கொடுங்க.. ரூ.500 வேண்டாம் ரூ.100 கொடுங்க - கரூரில் நூதன மோசடி மக்களே உஷார்

நூதன மோசடி

நூதன மோசடி

சில்லரை கேட்பது போல் ஏமாற்றி பணத்தை திருடி சென்ற இளைஞர்கள் குறித்து கரூர் வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

  • Share this:
    சில்லறை கேட்பது போல் நடித்து நூதன முறையில் பணம் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வியாபாரிகள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

    கரூர் சின்னாண்டான்கோவில் சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான டைல்ஸ், கிரானைட், மர விற்பனை கடைகள் அதிகமாக உள்ளது.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள வந்தனா மார்பிள்ஸ் என்ற கடைக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாலை 5 மணியளவில், தொழிலாளர்கள் சம்பளம் பிரிக்க வேண்டும் என கூறி இளைஞர்கள் சில்லரை கேட்டு வந்துள்ளனர்.அவர்கள் கூறியதை நம்பிய கடை உரிமையாளர் அவர்களிடமிருந்து 2000 ரூபாய் ஐந்து நோட்டுகள் பெற்றுக்கொண்டு அதற்கான சில்லரையாக, 500 ரூபாய் 20 நோட்டுகளை கொடுத்துள்ளார்.

    Also Read:  சுதாரித்த ஓட்டுநர்.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள் - வைரல் வீடியோ

    அதை பெற்றுக்கொண்ட  இளைஞர்கள் எண்ணி பார்ப்பது போல் பார்த்துவிட்டு 500 ரூபாய் நோட்டுகள் 10 தாளை கையில் பின்புறம் மறைத்துவிட்டு மீதமுள்ள பத்து 500 ரூபாய் நோட்டுகளை திருப்பி கொடுத்துவிட்டு 100 ரூபாய் நோட்டுகளாக கொடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.பணத்தை வாங்கியதும் அதை எண்ணி பார்க்காமல் கல்லாவில் போட்ட கடை உரிமையாளர், 100 ரூபாய் நோட்டுகள் இல்லை என கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள் சரி பரவாயில்லை 500 ரூபாய் நோட்டுகள் கொடுங்கள் என கூற 500 ரூபாய் நோட்டுகள் மீன்டும் 20 நோட்டுகளை வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர்.

    Also Read:  காயப்படுத்தியதால் சக்தியைப் பிரிகிறேன் - ஒரு மணி நேரத்தில் நீக்கப்பட்ட உடுமலைப் பேட்டை கவுசல்யா ஃபேஸ்புக் பதிவு

    இதேபோன்று மற்றொரு முறையும் ஏமாற்றி விட்டு சென்றுள்ளனர்.
    இந்நிலையில் இரவில் கல்லாவில் இருந்த பணத்தை கணக்கு பார்க்கும் போது 10,000 ரூபாய் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
    பின்பு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு சில்லரை கேட்பது போல் ஏமாற்றி பணத்தை திருடி சென்றது அந்த இளைஞர்கள் என்பது தெரியவந்தது.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த கடைக்காரர் அக்கம்பக்கத்தில் உள்ள கடைக்காரர்களிடம் நடந்ததை சொல்லி இருக்கின்றார். அவர்களும் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததையடுத்து, அருகில் இருந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவிகேமரா காட்சிகளை கடை உரிமையாளர்கள் சோதனை செய்துள்ளனர். அதில் 3 இரு சக்கர வாகனங்களில் ஆண்கள், பெண்கள் என 10 பேர் வந்திருப்பதும், அவர்கள் அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சென்றிருப்பதும், இதே செயலில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும்,தாங்கள் பாதிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வாட்ஸ் அப்பில் மற்ற வணிகர்களிடம் பகிர்ந்து நான் ஏமாந்துவிட்டேன் மற்றவர் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: கார்த்திகேயன் (கரூர்)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: