Lockdown | முழு ஊரடங்கில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்கள்...

கரூர் தூய்மை பணியாளர்கள்

முழு ஊரடங்கு நேற்று போட்டப்போதிலும் கூட கரூரில் துப்புரவுப் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர். இதனை பார்த்த அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். 

  • Share this:
    இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையினால் பல மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதில் தமிழகமும் அடங்கும். அதனால் தமிழக அரசு சில கட்டுபாடு விதிமுறைகளை அறிவித்துள்ளது. அவற்றுள் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு என்பதும் ஒன்று. இந்நிலையில் கரூரில் நேற்று முழு ஊரடங்கின்போதும் கூட தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை மேற்கொண்டனர்.

    இதில் கிருஷ்ணராயபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், தெருக்கள், சிறு வீதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தன. கடைகள்,  வர்த்தக நிறுவனங்கள், மட்டுமின்றி கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருந்தன.

    கரூர் தூய்மை பணியாளர்கள்


    மேலும் கிருஷ்ணராயபுரம், மாயனூர்,  புலியூர், மகாதானபுரம், காந்தி கிராமம் ஆகிய பகுதிகளில் மருந்துக்கடைகள், பால் நிலையம் திறந்திருந்தது. அதே நேரத்தில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தெருக்களை கூட்டி சுத்தம் செய்து குப்பைகளை லாரியில் அள்ளிச் சென்றனர்.

    மேலும் கிருமி நாசினி தெளித்து தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் அவர்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    மேலும் படிக்க...  Sunday Curfew Fine | முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றிய 620க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு... திருச்சி மாநகர காவல் துறை நடவடிக்கை

    செய்தியாளர்: கார்த்திகேயன், கரூர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: