Home /News /tamil-nadu /

கண்டித்த ஆசிரியரை சினிமா பாணியில் ஆட்களை கூட்டிவந்து மிரட்டிய மாணவன்.. பாதுகாப்பு கோரி ஆசிரியர் போலீசில் புகார்..

கண்டித்த ஆசிரியரை சினிமா பாணியில் ஆட்களை கூட்டிவந்து மிரட்டிய மாணவன்.. பாதுகாப்பு கோரி ஆசிரியர் போலீசில் புகார்..

பாதுகாப்பு கோரி ஆசிரியர் போலீஸீல் புகார்

பாதுகாப்பு கோரி ஆசிரியர் போலீஸீல் புகார்

Karur District : 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்,  ஒழுக்கமாக முடிவெட்டாமல் ரவுடி தோரணையிலும், சீருடை அணியாமலும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதைக்கண்ட  உடற்கல்வி ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார்.

    மாணவரின் ஒழுங்கற்ற செயலைக் கண்டித்த ஆசிரியர்கள் பாதுகாப்பு கோரி தோகைமலை காவல் துறையினரிடமும் மற்றும்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர் மாவட்டம், தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்,  ஒழுக்கமாக முடிவெட்டாமல் ரவுடி தோரணையிலும், சீருடை அணியாமலும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதைக்கண்ட  உடற்கல்வி ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் வெளியில் இருந்து நண்பர்களை அழைத்து வந்து நேற்று காலை பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    நல்ஒழுக்கம் பற்றி சுட்டிக்காட்டிய ஆசிரியரை சினிமா பாணியில் நண்பர்களை அழைத்து வந்து மிரட்டிய சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சமும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

    இதையும் படியுங்கள் : ஆன்லைன் குளறுபடி.. மூட்டைக்கு 27 ரூவா கேட்கும் அதிகாரிகள்.. நெல் கொள்முதலில் மெத்தனம் கரூர் விவசாயிகள் கண்ணீர்

    இதையடுத்து, ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து ஆசிரியகளும் தோகைமலை காவல்நிலையத்தில் மாணவர் மற்றும் அவருடன் வந்த  இளைஞர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியரை மிரட்டிய இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சக ஆசிரியர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி அந்த பள்ளி மாணவருக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக கவுன்சிலிங் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.



    இந்த நிலையில் மாணவரின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த ஒரு முறை திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனால், மாணவர் மீது புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், மாணவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு உடன் வந்த அடாவடி இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட மாணவர் செயல்பாடு குறித்தும், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், தமிழ்நாடு ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளித்துள்ளனர்.

    தி.கார்த்திகேயன்,செய்தியாளர், கரூர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Karur

    அடுத்த செய்தி