தமிழகத்தில் கொரோனா தொற்று 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 64 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
கரூர் நகராட்சி செல்லாண்டிபாளையத்தில் மக்களை தேடி மருத்தும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் அளிக்கப்படுவதை பார்வையிட்டு பயனாளிகளுக்கு இரு மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.
இதை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் நடந்த 5வது மெகா தடுப்பூசி முகாமில்,
20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சதவீதம் மேலும் 2 சதவீதம் உயரும்.70 சதவீதத்திற்கு மேலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது. 1.50 லட்சம் பேர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இது தெரிய வந்தது. மொத்த பரிசோதனையில் 0.80 சதவீதம் . அதாவது 1 சதவீதத்திற்கும் குறைவாகும்.
மேலும் படிக்க: மிக்சி, வாஷிங் மெஷின் பரிசுகள் வழங்கி கொரோனா தடுப்பூசி முகாம்- ஒரே நாளில் 22 லட்சம் பேருக்கு டோஸ்
கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 8,53,600 பேர். இதில் 6,22,921 பேர் என 73 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் கரூர் உள்ளது.
இதையும் படிங்க: 4 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது - தட்டுப்பாடு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையில் உள்ளது. பரீட்சார்த்த முறையில் செலுத்தும் பணி தொடங்கினால் அதனை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 18,87,703 பேர் பயனடைந்துள்ளனர் என்றார்.
செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Ma subramanian, News On Instagram