Home /News /tamil-nadu /

கரூரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ... கடைகளுக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்

கரூரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ... கடைகளுக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்

கடைகளுக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்

கடைகளுக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்

Karur District : மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையில் கடைகளுக்கு சீல் வைப்பதோடு உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கரூர் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நிகோடின் கலந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 125 பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டு மாவட்ட ஆட்சியரால் கடை சீல் வைக்கப்பட்டது.

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள மொத்த விற்பனை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும்புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்று சோதனை மேற்கொண்டதில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் மொத்த விற்பனைக் கடைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர்.



    புகாரின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டதில் ஏற்கனவே 5 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சில்லரை கடைகள் கொடுத்த தகவலின் பேரில் மொத்த விற்பனை கடைக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட விற்பனை செய்யும் கடைகளை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பாக வருவாய்த்துறை, காவல்துறை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.



    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையில் கடைகளுக்கு சீல் வைப்பதோடு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Karur

    அடுத்த செய்தி