Home /News /tamil-nadu /

குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் திமுக எம்.எல்.ஏ துவக்கி வைத்த ரோப் கார் சேவை... பொதுமக்கள் மகிழ்ச்சி

குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் திமுக எம்.எல்.ஏ துவக்கி வைத்த ரோப் கார் சேவை... பொதுமக்கள் மகிழ்ச்சி

திமுக எம்.எல்.ஏ துவக்கி வைத்த ரோப் கார் சேவை

திமுக எம்.எல்.ஏ துவக்கி வைத்த ரோப் கார் சேவை

குளித்தலை அருகே அய்யர்மலை  ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் ரோப் கார் சோதனை ஓட்டத்தை திமுக எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

    குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் ரோப் கார் சோதனை ஓட்டத்தை திமுக எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் மலை உச்சியில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த சிவஸ்தலம் ஆனது 1,017 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. இத்திருக்கோவிலில் கடந்த 2011ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் ரோப் கார் பணிகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற துவங்கியது.

    இடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொய்வான பணிகள் மீண்டும் துவங்கி மந்தமாக நடைபெற்று முழுமை பெறாத நிலையில்,  கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு என்று அவசர அவசரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.



    பின்னர் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜூன் மாதம் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டு ரோப்கார் பணிகளை 9 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.



    தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு  அய்யர்மலை திருக்கோவிலில் சில நாட்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டு மொத்தமாக ரூ. 6.17 கோடி மதிப்பில் தற்போது பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது.



    இந்த ரோப் கார் சோதனை ஓட்டத்தை குளித்தலை தி.மு.க எம்எல்ஏ மாணிக்கம் துவக்கிவைத்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்கள்  அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்றதை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: DMK, Karur

    அடுத்த செய்தி