• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கரூரில் இளங்கோவன் சகோதரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கரூரில் இளங்கோவன் சகோதரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கரூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கரூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

அதிமுக பிரமுகர் இளங்கோவின் சகோதரி இந்திராணி கலியபெருமாள், கரூர் லாலாபேட்டையில் வசித்து வருகிறார்.

  • Share this:
    கரூரில், சேலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் இளங்கோவனின் சகோதரி இந்திராணி கலியபெருமாள் வீட்டில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 5க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, தொழில் நிறுவனங்கள் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.  இதில் ஏராளமான கணக்கில் வராத சொத்துகளுக்கான ஆதாரங்கள், பத்திரங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், அந்த ஆதாரங்களை வைத்து அதன் தொடர்புடையவர்களிடம் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த, மாநில கூட்டுறவு சங்க தலைவரும் சேலம் மாவட்ட அஇஅதிமுக பேரவையின் செயலாளருமான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அதிமுக பிரமுகர் இளங்கோவின் சகோதரி இந்திராணி கலியபெருமாள் லாலாபேட்டையில் வசித்து வருகிறார். கலியபெருமாள் உயிரிழந்த நிலையில், தனது மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் வசித்து வருகிறார் இந்திராணி. அவரின்  வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 5க்கும் மேற்பட்ட போலீசார் சுமார் இரண்டு மணி நேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Must Read : வருவாயை விட 131% சொத்துக்குவிப்பு புகார் - மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீட்டில் ரெய்டு

    இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இந்த சோதனையில் அவரது சொத்து விபரங்களை சரி பார்ப்பதற்காக, வருவாய் துறையினரை அழைத்து வந்து, கணினி மூலம் சொத்து விவரங்கள் சரிபார்த்து வருகின்றனர்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: