தேசிய மக்கள் நீதிமன்றம்.. கரூரில் பதிவான 200 வழக்குகள் 4 கோடி ரூபாய் அளவிற்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக கரூரில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

 • Share this:
  கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக கரூரில் 4 கோடி ரூபாய் அளவிற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர் தெரிவித்தனர்.

  தேசிய சட்டப் பணிகள் மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பேரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.  அதேபோல் கரூர் மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம்  கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித்தலை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பதிவு செய்தி பயனடையுமாறு கரூர் மாவட்ட நீதிபதியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கிரிஸ்டோபர் தெரிவித்திருந்தார்.

  Also Read: திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் அழகிரி அலறுவது ஏன்? - பாஜக எச்.ராஜா கேள்வி

  இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன்களும் மற்றும் ஏனைய பிரச்சினைகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் எனவும், மேலும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கிக்கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  கடந்த 1 ஆம் தேதி முதல் 9ம் தேதி வரை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் சிவில் 7, ஜீவனாம்சம் 5,  தொழிலாளர் நல இழப்பீடு 5, மோட்டார் வாகன விபத்து வழக்கு 77, வங்கி கடன் நிதி நிறுவன கடன் வழக்கு 100 என 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

  Also Read: தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்..

  மோட்டார் வாகன விபத்து வழக்கில் 3 கோடியே 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அளவில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. வங்கி கடன் பிரச்சனை வழக்கில் 70 லட்சம் ரூபாய் அளவில் வழக்கு குறித்து தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர் தெரிவித்தனர். மேலும்  கடைசி நாளான நாளை 100 வழக்குகளுக்கு மேல் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தனர்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன் (கரூர்)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: