Home /News /tamil-nadu /

பிரதமர் மோடி, அண்ணாமலை படங்களில் கருப்பு பெயிண்ட் பூசிய மர்மநபர்கள் - கரூரில் பரபரப்பு

பிரதமர் மோடி, அண்ணாமலை படங்களில் கருப்பு பெயிண்ட் பூசிய மர்மநபர்கள் - கரூரில் பரபரப்பு

நாட்டு பிரதமர் புகைப்படத்தில் பெயிண்ட் அடித்த மர்மநபர்கள்

நாட்டு பிரதமர் புகைப்படத்தில் பெயிண்ட் அடித்த மர்மநபர்கள்

Indian Prime Minister Modi | கரூரில் பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர், மாவட்டத் தலைவர் புகைப்படங்களுடன் கூடிய சுவர் விளம்பரங்களை  மர்மநபர்கள் கருப்பு பெயிண்ட் பூசி அளிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    கரூரில் பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர், மாவட்டத் தலைவர் புகைப்படங்களுடன் கூடிய சுவர் விளம்பரங்களை  மர்மநபர்கள் கருப்பு பெயிண்ட் பூசி அளிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் சுற்றுச்சுவரில் ஒரே நேரத்தில் திமுக மற்றும் பாஜக கட்சிகள் சுவர் விளம்பரம் எழுத வந்ததால் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கரூர் மாநகரில் பரபரப்பு ஏற்பட்ட சமயத்தில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.



    இதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் சுவர்  விளம்பரத்தை அழித்து,  திமுகவினர் சுவர் விளம்பரம் எழுதியதாகவும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், பாஜகவினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



    நேற்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை பகுதியில் கரூர் மத்திய மாநகர் தலைவர் கார்த்திகேயன் சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் அன்று வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையில் புகைப்படம், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் புகைப்படங்களை மர்மநபர் கருப்பு பெயிண்டை கொண்டு அளிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.



    பாஜக சார்பில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் கொண்டு அளிக்கும் காட்சியின் போது யார் வந்து தடுப்பார்கள் எனப் பார்ப்போம் என இரண்டு நபர்கள் தடியுடன் சுற்றித் திரிந்தனர்.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Karur, Narendra Modi

    அடுத்த செய்தி