ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியிலேயே மின்வெட்டு.. விவசாயிகள் புலம்பல்

மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியிலேயே மின்வெட்டு.. விவசாயிகள் புலம்பல்

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

Karur : கரூர் மாவட்டத்தில் நகரப்புறங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும், கிராமப்புறங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்பு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 15 நாட்களாக அதிக வெப்பம் குறிப்பாக 103 முதல் 105 சதவீத வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஆகையால் மின்விசிறி மற்றும்  குளிர்சாதன பெட்டி போன்றவற்றை பயன்படுத்தாமல் பொதுமக்களால் இருக்க முடியாது என்ற நிலை உள்ளது.

  இந்நிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலையிலிருந்து பகுதி வாரியாக ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அதன்படி, கரூர் மாநகராட்சி பகுதியில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு அரை மணி நேரம் மின்வெட்டு இருந்து வந்தது.  மற்ற பகுதிகளான மாவட்டம் முழுவதும் அரவக்குறிச்சி, க.பரமத்தி, மாயனூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

  குறிப்பாக இரவு பத்தரை மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நள்ளிரவு ஒரு மணி நேரத்தைக் கடந்தும் மின்சாரம் வரவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

  சிறு குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை தூங்க வைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

  மேலும் விவசாயிகள் பகல் நேரத்தில் மும்முனை மின்சாரம் இல்லாமல் விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்டனர், இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றால் எப்போது மின்சாரம் வரும், எப்போது நிற்கும் என தெரியாத நிலையில், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு மணி நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச கூடிய இடங்களில், மின்சாரம் அடிக்கடி துண்டப்படுவதால்  இது ஐந்து மணி நேரமாக இருந்தும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

  இதேபோல, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவியது. 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

  Must Read : மிஸ்டர் அண்ணாமலை வன்னியர் சமூகத்தை எதிர்ப்பது நல்லதல்ல.. காடுவெட்டி குரு மகள் பரபரப்பு அறிக்கை

  இந்த மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது என்றும், இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Karur, Power cut, Senthil Balaji