Home /News /tamil-nadu /

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி... சோனியா காந்தியின் சதி: ஹெச்.ராஜா

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி... சோனியா காந்தியின் சதி: ஹெச்.ராஜா

கோப்புப் படம்

கோப்புப் படம்

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது  என்றும்  இது திட்டமிட்ட சதி என்றும் கூறிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளருமான ஹெச்.ராஜா கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது, இது திட்டமிட்ட சதி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி.

    பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளது. இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

    மேலும்,  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்வதிலும் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்த ஹெச்.ராஜா, இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படு தோல்வி அடைவது உறுதி என கூறினார்.

    இதையும் படிங்க: நாட்டிற்கே வழிகாட்டி என்று கூறுகிறார் ஸ்டாலின்.. ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பு கூட தரமாக இல்லை - எடப்பாடி பழனிசாமி


    பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் உள்ள புளியில் பல்லி உள்ளது. பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    செய்தியாளர்: கார்த்திகேயன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: H.raja bjp, PM Modi, Sonia Gandhi

    அடுத்த செய்தி