• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 15 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை.. உடலை காவிரி ஆற்றில் வீசிய கொடூரம் - பெண் உள்பட மூவர் கைது

15 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை.. உடலை காவிரி ஆற்றில் வீசிய கொடூரம் - பெண் உள்பட மூவர் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மூதாட்டி கொலை வழக்கில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யா அவரது மகன், மற்றும் உறவினர்  என 3 பேர்களை குளித்தலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Share this:
    பணம் கேட்டு கொடுக்காத  மூதாட்டி. 100 நாள் வேலைக்கு சென்ற போது தனது பையன் மூலமாக அழைத்து வரச்சொல்லி கழுத்தை நெரித்து கொன்று நகைகளைப் பறித்துக் கொண்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமம்,  கீழமேடு, பாரதி நகரைச் சேர்ந்தவர் அய்யர்  என்பவரது மனைவி அன்னாச்சி ( வயது 76) இவர் கடந்த 25 ஆம் தேதி  காலை 100- நாள் வேலைக்கு சென்றுள்ளார்.வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அன்னாச்சியின்  மகன்  தமிழ்செல்வன் என்பவர் குளித்தலை காவல் நிலையத்தில்  100 நாள் வேலைக்கு சென்ற தனது தாய் அன்னாச்சி வீடு திரும்பவில்லை என புகார் செய்துள்ளார். புகாரையடுத்து குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் வழக்கு பதிவு செய்து  விசாரணை செய்து வந்தனர்.

    Also Read: மனைவியுடன் கள்ளக்காதல்..கண்டித்தும் திருந்தாத நண்பன் - சேலம் வாலிபரை கர்நாடகாவில் வைத்து தீர்த்துக்கட்டிய கும்பல்

    விசாரணையில் மூதாட்டி அன்னாச்சி எப்போதும் கழுத்தில் அதிகமாக நகை அணிந்து இருப்பார் என்பதால் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 100 நாள் வேலையில் இருந்த மூதாட்டியை ஒரு பள்ளி மாணவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதைக்கொண்டு விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியின் வீட்டு அருகில் வசித்து வரும் சத்யா (36) என்பவர் மூதாட்டியிடம் பணம் கேட்டு கொடுக்கவில்லை என தெரிகிறது. பணம் கொடுக்காததால் தனது மகன் சஞ்சய் (15) வைத்து மூதாட்டியை வரவழைத்து அவரது வீட்டில் வைத்து உறவினர் முருகாணந்தம் (38) துணையோடு மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

    இதனையடுத்து கழுத்தில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் எடுத்துக்கொண்டு மூதாட்டியின் உடலை ஒரு சாக்கு பையில் மூட்டையாக கட்டி  இரவு நேரத்தில் திருச்சி அருகே உள்ள முக்கம்பு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மூதாட்டி அணிந்திருந்த  தங்கச்சங்கிலியை பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு நகைக்கடையில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. மேலும் மீதம் உள்ள நகைகளை குற்றவாளியான சத்யா வீட்டில், புதைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்து போலீசார் மீட்டுள்ளனர்.

    Also Read: 51 சவரன் நகை, காருடன் மனைவி காதலனுடன் ஓட்டம்.. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

    இந்த கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன்  மற்றும் உறவினர் ஒருவர் என 3-பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் யாராவது தொடர்பு உள்ளதா  என  விசாரித்து வரும் போலீசார்,  காவிரி ஆற்றில் மூதாட்டியின் உடலை தேடி வருகின்றனர்.பணத்திற்காக ஆசைப்பட்டு மூதாட்டியின் கழுதை அறுத்து கொலை செய்த சம்பவம்  இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன் (கரூர்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: