'வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை'... வரி வசூல் செய்யும் ஊராட்சி ஒன்றியம் - வியாபாரிகள் வாக்குவாதம்
'வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை'... வரி வசூல் செய்யும் ஊராட்சி ஒன்றியம் - வியாபாரிகள் வாக்குவாதம்
வியாபாரிகள் வாக்குவாதம்
அதிகாரிகளிடம் கடந்த 4 வாரங்களாக வசூல் செய்த தொகை எவ்வளவு என வியாபாரிகள் கேட்டதற்கு ஏழாயிரம், எட்டாயிரம் மட்டும்தான் என பொய்யான தகவல்களை கூறி வியாபாரிகளிடம் வசூல் செய்யும் பணத்தை அதிகாரிகளே சுருட்டி கொள்வதாகவும் குற்றம் சாட்டினர்.
கரூர் அருகே வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தராமல், கடந்த ஒரு மாதமாக ரசீது கொடுக்காமல் ஊராட்சி ஒன்றியம் வரி வசூல் செய்து வருவதாக பிடிஓ வை வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அருகே லாலாபேட்டையில் வாரச்சந்தை புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இதில் சந்தை டெண்டர் முடிந்துவிட்டதால் இந்த ஆண்டிற்கு சந்தை டெண்டர் எடுக்க எவரும் முன்வராததால் தற்சமயம் சுங்க வரி வசூலிக்க பிடிஓ ராஜேந்திரன் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறையினர் வந்தனர்.
இவர்கள் வசூலிக்கும் பணத்திற்கு ரசீது தரவில்லை என்றும் சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு சரிவர இல்லை என்றும் சந்தையின் நுழைவாயில் உள்ள சாக்கடை கால்வாய்க்கு பறிக்கப்பட்ட குழி மூடப்படாமல் அப்படியே உள்ளதாலும் வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் செய்து தராமல் எங்களிடம் வரிவசூல் செய்யக்கூடாது என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் சந்தை பகுதியில் 1 மணி நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும், கடந்த 4 வாரங்களாக வாரத்திற்கு 15 ஆயிரம் வரை வரி வசூல் செய்துவிட்டு பணத்திற்கான ரசீது கொடுக்காமலே அதிகாரிகள் சென்று வருகின்றனர்.
அந்த பணம் ஊராட்சி ஒன்றியத்தில் கணக்கு காண்பிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிகாரிகளிடம் கடந்த 4 வாரங்களாக வசூல் செய்த தொகை எவ்வளவு என வியாபாரிகள் கேட்டதற்கு ஏழாயிரம், எட்டாயிரம் மட்டும் தான் என பொய்யான தகவல்களை கூறி வியாபாரிகளிடம் வசூல் செய்யும் பணத்தை அதிகாரிகளே சுருட்டி கொள்வதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.