• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

  • Share this:
    கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்கள் மிக பாதுகாப்பாக உள்ளன என்றும், அதிமுக 140 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிதான் தொடரும் என்று கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் கரூர் தளவாபாளையத்தில் உள்ள எம்.குமாரசாமி தனியர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பை கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார்.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்


    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அபோது,  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் கண்டெய்னர் லாரி வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து கேட்ட கேள்விக்கு அவர்கள் தோல்வி பயத்தில் கூறுகின்றனர் என பதிலளித்தார்.

    மேலும், 2016 ம் ஆண்டு தேர்தலில் அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி சேனல்களும் கருத்து கணிப்பில் அதிமுக வெற்றி பெறாது, திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அதிமுக மீண்டும் வெற்றி பெற்றது. அதே போல் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்றார்.

    மேலும் படிக்க... ரூ.3 லட்சம் ரேஸ் பைக்கிற்காக செயின்பறிப்பில் ஈடுப்பட்டவர் கைது..

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கரூர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்கள் மிக பாதுகாப்பாக உள்ளன என்றும், அதிமுக 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நம்பிக்கையாக கூறினார்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: