Home /News /tamil-nadu /

மழை வெள்ளத்தால் கரூரில் 100 ஏக்கருக்கும் மேல் நெல், வாழை பயிர்கள் சேதம்

மழை வெள்ளத்தால் கரூரில் 100 ஏக்கருக்கும் மேல் நெல், வாழை பயிர்கள் சேதம்

வயல்களில் பாய்ந்தோடும் மழை நீர்

வயல்களில் பாய்ந்தோடும் மழை நீர்

கரூரில் கனமழை காரணமாக சுமார் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியதால், சுமார் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் வாழை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கரூர், வெள்ளியணை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை,  லாலாப்பேட்டை, மகளிப்பட்டி ஆகிய பகுதிகளில் கொட்டியது. சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் பலத்த கன மழையும் பெய்தது.

    இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடர்ந்து லாலாப்பேட்டை அடுத்த மகிளிட்டியிலிருந்து நந்தன்கோட்டை செல்லும் தார்சாலை மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டது.

    கனமழை காரணமாகசுமார் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    மழை பெய்யும் காலங்களில் சாலை ஓரங்களில் வடிகால் நீர் வெளியேற சரியான வசதி இல்லாததால் மழைநீர் விளை நிலங்களுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது. எனவே, மகிளிப்பட்டியில் இருந்து நந்தன் கோட்டை செல்லும் சாலையில் உள்ள சிறிய குழாய் அப்புறப்படுத்திவிட்டு பெரிய பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து மதுரை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் செல்கிறது. மகிளிப்பட்டி வாய்க்கால் பாலம் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தார்சாலை உடைப்பு ஏற்பட்டது.

    Must Read : செம்பரம்பாக்கம் ஏரியில் 2000 கன அடி நீர் வெளியேற்றம்.. அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு

    மேலும், குழாய் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை, நெல், வெற்றிலை உள்ளிட்ட சாகுபடிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்ட துணை செயற்பொறியாளரை முற்றுகையிட்ட விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Karur, Rain

    அடுத்த செய்தி