• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வீதி வீதியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

வீதி வீதியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்ய ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன.

  • Share this:
    கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் “தூய்மை கரூர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நகராட்சி அதிகாரிகளுடன் வீதி வீதியாக நடந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்ய ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

    ஆய்வு பணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் அனல் மின் நிலையங்களில் 58 சதவீதம் மின் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் அனல் மின் உற்பத்தி மூலம் 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் 1,800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்தனர்.

    தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்காகவே முறையாக பராமரிக்காமல் குறைவாக மின்சாரம் உற்பத்தி செய்துள்ளதாக குற்றச்சாட்டிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி 3500 மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரிக்க பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது உள்ளதை விட 70 சதவீதம் உற்பத்தி அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்ய ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. கரூர் நகராட்சியில் 11,575 தெருவிளக்கு மின் கம்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில், நீண்ட காலமாக பழுதடைந்து கிடந்த 3550 மின் கம்பங்கள் கடந்த 4 மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது.

    Must Read : பில்லூர் அணை திறப்பு : பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    100 மீட்டருக்கு ஒரு மின்கம்பம் என்ற அடிப்படையில், கரூர் நகராட்சியில் 2300 புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: