ஏழை எளிய மக்களுக்காக 'தளபதி கிச்சன்' திட்டம் தொடக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி

 • Share this:
  கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் தளபதி கிச்சன் திட்டத்தை துவக்கி அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

  கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி தமிழக மின்த் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இன்று கரூர் வந்தார். பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநேரே தலைமையில் அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை நடத்திய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று பிரிவுகளாக தொற்றை தரம் பிரித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று குறைவாக உள்ளவர்கள் சிகிச்சை பெற கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் முதல்கட்ட சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது.

  இரண்டாம் கட்டமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், குளித்தலை உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மருத்துவ பிரிவு, மூன்றாம் கட்டமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் கூடுதல் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  வரும் 25 ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் எட்டு இடங்களில் சிறப்பு மருத்துவப் பிரிவு பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ. 51 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளது இதில் ஆக்சிசன் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவ பிரிவு செயல்பாட்டிற்கு வர உள்ளது.

  கரூர் மாவட்டம் விரைவில் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
  Published by:Vijay R
  First published: