Home /News /tamil-nadu /

மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின் உற்பத்திக்காக அந்தந்த மாவட்டத்திலே சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்றும், விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டாலும், தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க அதற்கான மானியத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது எனவும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “விவசாயிகள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு, 20 ஆண்டுகளாக்கு மேலாக காத்திருந்து 4.50 லட்சம்.மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மின் துறையில் இதர பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் என்பது கடந்த ஆட்சியிலேயே 2018 இருந்தே கொண்டு வரப்பட்டது. புதிதாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதை போல எதிர்கட்சி தலைவர் கூறி வருகிறார். மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

    கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி என்பது 53 சதம் மட்டுமே. 2017 ம் ஆண்டிலேயே விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்துவது தொடங்கப்பட்டது. இப்போதுதான் மீட்டர் பொருத்தப்படுவது போல அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்துவதில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில். மீட்டர் பொருத்தப்பட்டாலும், தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க அதற்கான மானியத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    தமிழகத்தில் 17 சதவிகிதம் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் போது இழப்பு ஏற்படுகிறது. மின்மாற்றிகளில் டி.பி மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் அதற்கான அறிவிப்பு இந்த கூட்டத் தொடரில் வரும்.

    மின் வாரியத்தில் 3 ல் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. மாதாந்திர கணக்கெடுக்க இரண்டு பங்கு ஊழியர்கள் தேவை. விரைவில் மாதாந்திர கணக்கெடுப்பு செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார். சென்னை மாநகராட்சியில் பூமிக்கடியில் மின்பாதை அதிகப் படுத்தப்பட்ட பிறகு மற்ற மாநகராட்சிக்கு முதல்வர் அனுமதியோடு விரிவுபடுத்தப்படும்” என்றார்.

    Read More : தஞ்சையில் அண்ணா, கருணாநிதி முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    விவசாய நிலங்களுக்கு மேல். உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் போராடி வருவது குறித்த கேள்விக்கு, “உயர் மின்கோபுர அமைப்பதால், இழப்பீடு பெறாத விவசாயிகள் பட்டியல் அளித்தால், ஒரு மாத காலத்துக்குள் இழப்பீடு வழங்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே ஒப்புக்கொண்டு கையெப்பமிட்ட விவசாயிகள் இரட்டிப்பு இழப்பீடுக்காக கேட்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

    Must Read : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின் உற்பத்திக்காக அந்தந்த மாவட்டத்திலே சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்” என்றார்.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன், கரூர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Electricity bill, GST, Senthil Balaji

    அடுத்த செய்தி