கரூரில் தனியார் பால் நிறுவனத்தில் ரூ.79 லட்சம் மோசடி செய்த மேலாளர் கைது
கரூரில் தனியார் பால் நிறுவனத்தில் ரூ.79 லட்சம் மோசடி செய்த மேலாளர் கைது
மோசடி செய்த மேலாளர்
Karur District : மோசடி செய்ததாக நிறுவனத்தின் பங்குதாரர் சுந்தரராஜ் என்பவர் கரூர் குற்றப்பிரிவு போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் மேலாளர் சதீஷ்குமார் கைது செய்து சிறையில் அனுப்பப்பட்டார்.
கரூர் : கரூரில் தனியார் பால் நிறுவனத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலிற்கு, கூடுதலாக தொகை கொடுத்ததாக கூறி சுமார் 79 லட்ச ரூபாய் மோசடி செய்த மேலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பணியாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் தனியார் பால் கொள்முதல் நிறுவனத்தில் (ஆசை புட்ஸ்) பணிபுரிந்த மேலாளர் சதீஷ்குமார், மற்றும் கோபால், சந்திரலேகா, சுரேஷ் மருதமுத்து, கந்தசாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து, விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பாலின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை கூடுதலாக காண்பித்து மாடு வளர்ப்பவர்களின் பெயரில் போலியாக பில் கொடுத்து, அவர்களுக்கு தொகை கொடுத்ததாகக் கூறி சுமார் 79 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
மோசடி செய்ததாக நிறுவனத்தின் பங்குதாரர் சுந்தரராஜ் என்பவர் கரூர் குற்றப்பிரிவு போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் மேலாளர் சதீஷ்குமார் கைது செய்து சிறையில் அனுப்பப்பட்டார். மேலும் தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரியும் பால் அளவீடு செய்பவர் மற்றும் உதவியாளர்கள் கோபால், சந்திரலேகா, சுரேஷ், மருதமுத்து, கந்தசாமி தலைமறைவாகியுள்ளனர். மோசடி செய்து தலைமறைவாக உள்ளவர்களைதனிப்படை அமைத்து குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.