முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மனைவி நடத்தையில் சந்தேகம்.. குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கணவன் - குளித்தலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மனைவி நடத்தையில் சந்தேகம்.. குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கணவன் - குளித்தலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

முருகேசன்

முருகேசன்

முருகேசன் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து குழந்தைகள் கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் (வயது 30),  பிரியா (27) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் இருந்தனர். முருகேஷன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். குடும்பத்தகராறு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக பிரியா அடிக்கடி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிக்கு செல்வது பின்னர் உறவினர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் பேசி மீண்டும் அழைத்து வருவது வாடிக்கையாக இருந்துள்ளது.

Also Read: கடம்பூர் மலைக்கோயிலில் போதை இளைஞர்கள் வேல் கம்புகளை பிடுங்கி அட்டகாசம் - வீடியோ வைரலானதால் நடவடிக்கை

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த முருகேசன் மனைவி பிரியாவிடம் சண்டை போட்டுள்ளார். பிரியா கடுமையாக தாக்கிவிட்டு தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். குழந்தையுடன் சென்ற கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பிரியா இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் தன் உறவினர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார். இரவு வரை தேடியும் குழந்தைகளும், முருகேசனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மறுநாள் காலையில் ஆவுடையான்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் யாரோ உதவிக்கு அழைக்கும் சத்தம் கேட்டுள்ளது. பொதுமக்கள் எட்டிப்பார்த்தபோது அங்கு முருகேசன் மோட்டார் அறைக்கு செல்லும் பம்பை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். குழந்தைகள் இருவரும் கிணற்றில் சடலமாக மிதந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து முருகேசன் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். குழந்தைகள் இருவரும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Also Read: நண்பன் கொடுத்த ட்ரீட்.. தலைக்கேறிய போதையில் பெண்ணிடம் சில்மிஷம் – ஹோட்டலில் நடந்த அடிதடி சண்டை

இதனையடுத்து முருகேசனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த குழந்தைகள் பிறப்பின் மீது சந்தேகம் அடைந்து மனைவியிடம் தகராறு செய்தது தெரியவந்தது. சம்பவத்தன்று மனைவியிடம் சண்டையிட்டு குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். குழந்தைகள் இருவரையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார். பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள கிணற்றில் குதித்துள்ளார். ஒரு கட்டத்தில் பயத்தின் காரணமாக கிணற்றின் கரையில் சென்று நின்றுக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Arrest, Child murdered, Crime News, Girl Murder