ஸ்டாலின் முதல்வர் ஆனதால் வேண்டுதல் நிறைவேறியதாக தீக்குளித்த நபர் உயிரிழப்பு... கரூரில் பரபரப்பு

உயிரிழந்த உலகநாதன்

உலகநாதன் போக்குவரத்து துறையில் டிக்கெட் பரிசோதகராக இருந்து ஓய்வு பெற்றவர். உலகநாதன் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

 • Share this:
  மு.க.ஸ்டாலின் முதல்வரானதால் வேண்டுதல் நிறைவேறியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உலகநாதன் என்பவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கரூர் அருகே மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயிலில் உலகநாதன் என்பவர் தீக்குளித்துள்ளார். பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீவைத்து கொண்ட உலகநாதன் உயிரிழந்துள்ளார்.

  தீக்குளித்தற்கான காரணம் தொடர்பாக உலகநாதன் இருபக்கம் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றும், செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  Also Read : வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை!

  உலகநாதன் போக்குவரத்து துறையில் டிக்கெட் பரிசோதகராக இருந்து ஓய்வு பெற்றவர். உலகநாதன் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். உலகநாதன் முதல்வர் ஸடாலின் முதல்வராக வேண்டுமென அந்த பகுதியில் உள்ள புது காளியம்மன் கோயில் வேண்டி உள்ளார். தனது வேண்டுதல் நிறைவேறினால் தீக்குளிக்கிறேன் என்று வேண்டி உள்ளார்.

  இந்நிலையில் ஸ்டாலின் முதல்வரானதை தொடர்ந்து புது காளியம்மன் கோவிலில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். கொரோனா காரணமாக கோயில்கள் திறக்கப்படமால் இருந்தது. தற்போது கோயில்கள் திறக்கப்பட்டதால் கோவிலுக்குள் அவர் தீக்குளித்து உள்ளார். தீக்குளித்த உலகநாதன் உயிரிழந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: