முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உங்க வீட்டு விருந்துக்கா வந்திருக்கேன்?.. திமுகவினரிடம் ஜோதிமணி ஆவேசம்

உங்க வீட்டு விருந்துக்கா வந்திருக்கேன்?.. திமுகவினரிடம் ஜோதிமணி ஆவேசம்

ஜோதிமணி

ஜோதிமணி

திமுக நிர்வாகிகள் ஒருமையில் பேசி எம்.பி., ஜோதிமணியை வெளியேற சொல்லி கூச்சலிட்டு உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை வெளியேற்றிய திமுகவினர். ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்து வெளியேறினார்.

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளிடையே இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில்,

கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் கரூர் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Also Read: பொது எதிரி திமுகதான்... அதிமுகவுடன் வருத்தம் இல்லை - அண்ணாமலை

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார் என கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் ஒருமையில் பேசி எம்.பி., ஜோதிமணியை வெளியேற சொல்லி கூச்சலிட்டு உள்ளனர். பேச்சவார்த்தையின்போது,

திமுகவினர் வெளியேற சொன்னதாக ஜோதிமணி ஆவேசமாக வெளியில் வந்து உங்கள் வீட்டு விருந்துக்கு வந்திருக்கிறேனா? எதற்கு மரியாதை தெரியாமல் எங்களை வெளியில் போகச் சொல்கிறீர்கள்.

பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்று ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார். பேச்சுவார்த்தையின்போது எம்.பி ஜோதிமணியை வெளியே போகச் சொன்னதாக, திமுக கட்சி அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசியதை நிருபர்கள் படம் பிடித்த போது திமுகவினர் எடுக்க விடாமல் தடுத்தனர்.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன் (கரூர்)

First published:

Tags: Congress, DMK, Jothimani, Local Body Election 2022, Senthil Balaji