Home /News /tamil-nadu /

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 என்னாச்சு.. உதயநிதியை நோக்கி பாய்ந்த கேள்வி

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 என்னாச்சு.. உதயநிதியை நோக்கி பாய்ந்த கேள்வி

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

குடும்பத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னீர்கள் என்னாயிற்று உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பொதுமக்கள்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து கரூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினிடம், குடும்பத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னீர்கள் என்ன ஆயிற்று என்று கேட்ட பொதுமக்களால் பரபரப்பு.

    கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கரூர், வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

    Also Read: வெள்ளியிலேயே அம்மி முதல் உலக்கை வரை.. வாயடைக்க வைத்த சிவகங்கை திருமண சீர்வரிசை - படங்கள்

    கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் 48 மாமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கு சேகரித்து முடித்துவிட்டு, பிறகு வேலாயுதம்பாளையம் நகராட்சி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அப்போது, தி.மு.க அரசு கடந்த எட்டு மாதங்களில் செய்துள்ள நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக கூறி வந்தார்.

    அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த பொதுமக்களில் ஒரு சிலர் குடும்ப அட்டைக்கு மாதம் ரூபாய் 1000 தருவதாக கூறியது என்னாயிற்று என்று கேள்வி எழுப்பினர். திடீரென திகைத்து நின்ற உதயநிதி ஸ்டாலின், சட்டென சுதாரித்துக் கொண்ட உதயநிதி கொடுத்துருவோம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது  என்றார்.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன் ( கரூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, Local Body Election 2022, Politics, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி