ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே திமுக பிரமுகர் வாக்கு சேகரிப்பு - கூட்டணி கட்சிகள் குழப்பம்

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே திமுக பிரமுகர் வாக்கு சேகரிப்பு - கூட்டணி கட்சிகள் குழப்பம்

கரூர்

கரூர்

karur : தன்னிச்சையாக திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது கூட்டணி கட்சிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கரூர் மாநகராட்சியில் வேட்பாளர் அறிவிக்காத நிலையில் திமுக பிரமுகர் தீவிர வாக்கு சேகரிப்பு. கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளர் பட்டியலை இன்னும் இறுதி செய்யவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்னும் தொடங்கபடவில்லை.

  புதிதாக தரம் உயர்த்தப்பட்ட கரூர் மாநகராட்சியில், 48 வார்டுகள் உள்ளன. கரூர் மாநகராட்சியில்   அதிக வாக்காளர்களை கொண்ட ஒரே வார்டு 46வது வார்டு பகுதியில் 6876 வாக்காளர்கள் உள்ளனர்.  இதில் திமுகவின் சார்பாக கரூர் மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் தாரணி.சரவணன் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.மேலும், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்தும், துண்டு கொடுத்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.

  Must Read : நகர்புற உள்ளாட்சி தேர்தல் : திமுக மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

  இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள் என கூட்டணி கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் வார்டு ஒதுக்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், தன்னிச்சையாக திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது கூட்டணி கட்சிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: தி. கார்த்திகேயன் ( கரூர்)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: DMK, Election, Karur, Local Body Election 2022, Tamilnadu