ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள், அவமானமாக உள்ளது - தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் கடிதம்

மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள், அவமானமாக உள்ளது - தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் கடிதம்

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் உருக்கமான கடிதம்

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் உருக்கமான கடிதம்

கரூரில் பாலியல் தொல்லையால், தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கரூர் அருகே 12ம் வகுப்பு மாணவி அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதுகுறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலை கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதாக மாணவி குறிப்பிட்டிருந்தார். எனினும் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது.

  இந்த சூழலில் அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை விவகாரத்தில், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர் இவர்தானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் கணித ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. அதில், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்னை மன்னித்து விடுங்கள், உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்.என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள் மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ விருப்பமில்லை.

  இன்று காலை வந்தவுடன் மாணவர்கள் என்னைத் தவறாகக் கூறுகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருப்பேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். நன்றாக படியுங்கள். ஐ மிஸ் யூ ஆல் என கடிதத்தை எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Crime News, Karur