மோசடியில் இருந்து தப்ப அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த யூனியன் சேர்மன்!

கரூர்

கூட்டுறவு சங்க தலைவர்  செல்வராஜ் அவரது சொந்தக்காரரான தரகம்பட்டி எஸ் கே வி மேல்நிலைப்பள்ளி பங்குதாரர்  குழந்தைவேலு மற்றும் அவரின் மனைவி அரசு பள்ளி ஆசிரியை ராஜலட்சுமி அவரது பெயரில் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் பயிர் கடன் வழங்கி தள்ளுபடி செய்துள்ளனர்.

 • Share this:
  ரூ.1.70 கோடி  பயிர் மற்றும் நகைக் கடன் விவசாயிகளுக்கு வழங்கியதாக தள்ளுபடி பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க செயலர் மீது குற்றம்சாட்டிய  பொதுமக்கள், மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கூட்டுறவு சங்க தலைவரும் கடவூர் ஒன்றிய யூனியன் சேர்மனும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து உள்ளதாக தெரிவித்தனர்.

  கரூர் மாவட்டம், பாலவிடுதி (TYSPL- 9) தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மாவட்டத்திலேயே அதிக வருவாய் கிராமங்கள், அதிக  உறுப்பினர்கள் கொண்ட கூட்டுறவு வங்கி ஆகும். கடவூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாதனூர், தரகம்பட்டி, செம்பியநத்தம் உள்ளிட்ட 8 வருவாய் கிராம பஞ்சாயத்துக்களில் சுமார் 132 குக்கிராமங்கள் உள்ளது. 4,750  உறுப்பினர்கள் கொண்ட கூட்டுறவு வங்கியாக உள்ளது.

  Also Read: Lionel Messi | கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி.. முடிவுக்கு வந்த 21 ஆண்டுகால பயணம்!

  கடந்த 2013 முதல் 2021 வரை பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அரசு வழங்கும் சலுகைகளான பயிர்க்கடன் மற்றும் விவசாய நகை கடன் வழங்குவதில் பாலவிடுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றி வரும் மாரிமுத்து மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவரும், கடவூர் ஊராட்சி ஒன்றிய தலைவருமான என் செல்வராஜ் ஆகியோர் தகுதியுள்ள விவசாயிகளுக்கு பயிர்க் கடன்களை வழங்காமல் அவரைச் சார்ந்த நபர்கள் ஆதரவாளர்கள், நிலம் இல்லாதவர்கள், அரசுப் பணியில் உள்ளவர்கள், அவரைச் சார்ந்த ஒரே குடும்பத்தில் 4க்கும் மேற்பட்டோர், ஆகியோர்க்கு பயிர்க் கடன்களை வழங்கி தள்ளுபடி செய்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார்கள்.
  Also Read: ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தலையணைக்குள் வைத்து தூங்கினேன் – நீரஜ் சோப்ரா ஷேரிங்க்ஸ்

  பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்2021- தள்ளுபடியான 7 கோடியே 20 லட்சம் தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டது ரூ.1,69,95,756, தொகையாகும். 2016ம் ஆண்டில் தள்ளுபடி ஆகி முறைகேட்டில் ஈடுபட்ட தொகை தோராயமாக 2.கோடியே 60 லட்சம் என 3 கோடி அளவில் மோசடியும்,  அரசு அறிவித்த தள்ளுபடி பயனாளி பட்டியலில் பெயர் மட்டும் நகை கடன் தள்ளுபடி ஆவதற்கு தள்ளுபடி சான்று வழங்க கையூட்டு பெற்று உள்ளனர்.

  கூட்டுறவு சங்க தலைவர்  செல்வராஜ் அவரது சொந்தக்காரரான தரகம்பட்டி எஸ் கே வி மேல்நிலைப்பள்ளி பங்குதாரர்  குழந்தைவேலு மற்றும் அவரின் மனைவி அரசு பள்ளி ஆசிரியை ராஜலட்சுமி அவரது பெயரில் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் பயிர் கடன் வழங்கி தள்ளுபடி செய்துள்ளனர்.

  Also Read: அமைச்சருக்கான சலுகைகள் தருவதாக அறிவித்த கர்நாடக அரசு – மறுத்த எடியூரப்பா!

  பாலவிடுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி காவலாளி (watchman)  சுப்பிரமணி அவரது பெயரிலும் நிலமே இல்லாத அவரது குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரிலும் பயிர்க் கடன்களை வழங்கி தள்ளுபடி செய்துள்ளனர்.

  குறிப்பாக கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராஜ் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சொந்த பஞ்சாயத்தான பாலவிடுதி மற்றும் சொந்த ஊரான சிங்கம்பட்டியில் அதிகப்படியான பயணிகளை முறைகேடான முறையில்  பயிர் மற்றும் விவசாய நகை கடன் பயனாளிகளை தேர்வு செய்து தள்ளுபடி செய்து அவர்களிடம் கையூட்டுப் பெற்று உள்ளனர்.

  2016 க்கு பிறகு கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராஜின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

  Also Read:   ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

  தனியார் பள்ளி, தரகம்பட்டியில் 300 ஏக்கர் நிலங்கள், பல கோடி ரூபாய் பணம், இதுபோன்று ஏகப்பட்டவை முறைகேட்டில் ஈடுபட்டு சொத்து சேர்த்துள்ளார்.

  மேலும் கரூர் மாவட்ட கூட்டுறவு கடன் சங்க தலைவருக்கும் தொடர்புள்ளதாக விவசாயிகள் சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.

  தற்போது விவசாயிகள் மற்றும் ஏழை மக்களை ஏமாற்றி அரசு பணத்தில் கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்துக்களை பாதுகாக்கவே, கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
  இந்த மோசடி குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, கூட்டுறவுத்துறை அமைச்சர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

  ஏர் பிடித்து உழவு செய்யும் உண்மையான விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் மற்றும் பயிர் கடன்களை வழங்காமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத் தலைவர்  செல்வராஜ், கூட்டுறவு சங்கத் செயலாளர் மாரிமுத்து மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து, மக்கள் பணத்தில் ஏமாற்றி வாங்கிய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  Also Read:  ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

  இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் மாரிமுத்து டம் கேட்டபோது நான் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை. நீங்கள் வேண்டுமென்றால் ஆய்வு செய்து கொள்ளுங்கள். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி தான் நான் கடன் வழங்கி உள்ளேன். அதுதான் தள்ளுபடி ஆகியுள்ளது. என் மேல் ஏதும் தவறு இல்லை என தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக விலிருந்து  கடவூர்  ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது திமுகவில் இணைந்து உள்ள செல்வராஜிடம் கேட்டபோது, கடந்த உள்ளாட்சித் தேர்தலில்  தோல்வியடைந்தவர்கள் தூன்டுதல் காரணமாகவும், அதிமுக அரசியல் சூழ் நிலை சரியில்லாத காரணத்தால், தற்போது திமுக வின்  நல்ல நடவடிக்கையாலும் நான் திமுகவில் இணைந்து உள்ளேன். நான் தவறு செய்திருந்தால் என்னை திமுகவில் சேர்த்து இருப்பார்களா? முழுவதுமாக அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே வேண்டுமென்றே என் மீது  பழி போடப்படுகிறது என தெரிவித்தார்.

  இந்த மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே கடந்த 10 ஆண்டுகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், தற்போது திமுகவில் இணைந்து உள்ளார் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதே போல் பழைய ஜெய கொண்ட சோழபுரத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவராக  அதிமுக சேர்ந்தவர் கல்குவாரிக்கு பயிர் கடன்களை வாங்கி தள்ளுபடி பெற்று மோசடிகளில் ஈடுபட்டவரும் தற்போது திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  தி.கார்த்திகேயன், செய்தியாளர் - கரூர்
  Published by:Arun
  First published: