கூட்டுறவு சங்கத்தில் மோசடி: தப்பிப்பதற்காக அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய நபர்!

கடன் மோசடி

கரூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மோசடி குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக  அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்தனர்.

 • Share this:
  கரூரில் கல்குவாரிக்கு பயிர் கடன் வாங்கி மோசடி செய்த அதிமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.
  இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 2500 நபர்கள் உறுப்பினராக உள்ளனர்.
  இவர்களுக்கு ஆண்டுதோறும் விவசாய கடன்,  நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் சுமார் ரூ. 3 கோடி அளவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல முறைகேடு நடந்துள்ளதாக  காவல் துறை ஓய்வுபெற்ற ஆய்வாளர்,  கணபதி கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்  பேரூராட்சி  முன்னாள் தலைவரும்அதிமுகவை சேர்ந்தவருமான செல்வராஜ் என்பவர் சேங்கல் பகுதியில் தனது மனைவி சாந்தி பெயரில் உள்ள கல்குவாரி நிலத்தின் பட்டா மற்றும் சர்வே எண்ணை காண்பித்து இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்றுள்ளார். அந்த கடன் கடந்த மார்ச் மாதம் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  இதே போல இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் பல பினாமி பெயர்களில் கடன் பெற்று பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்.
  அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மேலும்,  செல்வராஜ் மோசடிக்கு உடந்தையாக இருந்த கூட்டுறவு சங்கத் தலைவர் வேணுகோபால்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செகரட்டரி கிருஷ்ணமூர்த்தி,  ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கணபதி தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள்: கவனமாக இருக்க அறிவுறுத்தல்!


  உண்மையான விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு,  அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
  கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மோசடி குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக  அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்தனர்.

  மேலும் படிக்க:  தமிழக பா.ஜ.கவின் தலைவராக அண்ணாமலை நியமனம்..


  இதுகுறித்து புகாருக்குள்ளான செல்வராஜிடம் கேட்டபோது  ‘எனக்கு மற்றும் எனது மனைவி பெயரில் நிலங்கள் அதிகமாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தவறான சர்வே எண்ணை எழுதிக் கொடுத்தது அதன் மூலம் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு என்னை பணம் கட்ட சொன்னார்கள் அதனால் கட்டி விடுகிறேன் என்று கூறியுள்ளேன். மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோல் என் மேல் வீண்பழி சுமத்துகிறார்கள்’ என்று கூறினார்.

  செய்தியாளர்: கார்த்திகேயன்
  Published by:Murugesh M
  First published: