கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சியில் ஒத்தப்பட்டி கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தைச் சுற்றி அரசு புறம்போக்கு நிலம் இல்லாமல் பட்டா நிலங்கள் அதிகமாக உள்ளதால் இந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, எரிமேடை வசதி உள்ளிட்ட எதுவும் இல்லாத அவல நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை மாவட்டம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அந்த ஊரைச் சேர்ந்த பிச்சை என்பவர் இறந்துள்ளார். சரியான சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை, உறவினர்கள் விளைந்த வயல்வெளி நிலத்தில் இறங்கி கொண்டு சென்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
எடப்பாடியை பா.ஜ.க பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், மயான வசதி பாதை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: கார்த்திகேயன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.