கரூரில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் ’தளபதி கிச்சன்’ திட்டம்!

தளபதி கிச்சன்

தளபதி ஸ்டாலின் திட்டத்தின்படி தொலைபேசியில்  தொடர்பு கொள்பவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்  என்றும் நேற்று 3307 பேர் தொடர்பு கொண்டு உணவு கேட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

 • Share this:
  கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிப்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று உணவு வழங்கும் தளபதி கிச்சன் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவங்கள்  மட்டும் நேரக் கட்டுப்பாட்டுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  முழு ஊரடங்கு காரணமாக தினக் கூலிகள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு உணவு கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், கரூரில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் உணவின்றி தவிக்க கூடாது என்பதற்காகவும், சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும்  வகையில் தளபதி ஸ்டாலின் திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயன் முன்புறம் துவக்கி வைத்தார்.

  அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தளபதி கிச்சன் எனும் பெயரில்  தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின்படி தொலைபேசியில்  தொடர்பு கொள்பவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்  என்றும் நேற்று 3307 பேர் தொடர்பு கொண்டு உணவு கேட்டதாகவும்  தெரிவித்தார். தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படுவதாக  தெரிவித்த அவர்,  கரூர் சட்டமன்ற அலுவலகத்தில் 3 வேளை உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க... தமிழகத்தில் தேச விரோதப் போக்கு அதிகரிப்பு- சுப்பிரமணியன் சுவாமி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   

  செய்தியாளர்: கார்த்திகேயன்
  Published by:Murugesh M
  First published: