கோவில் அருகே கட்சிக்கொடி கம்பம்: இரு சமுதாயத்தினர் இடையே பதற்றம்

இரு தரப்பிடையே பதற்றம்

கொடி கம்பம் அமைக்கக் கூடாது என சமரசக் கூட்டத்தில் முடிவு செய்த நிலையில், அதனை மீறி ஒரு தரப்பினர் தங்களின் கட்சிக் கொடியை இரவோடு இரவாக நட்டு வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

 • Share this:
  கரூரில் இரு சமுதாயத்தினரிடையே கொடிக்கம்பம் நடுவதில் கருத்துவேறுபா டு நிலவும் சூழலில் கொடி கம்பத்தை நட்ட இடத்தில் மாற்று சமுதாய மக்களின் கோவில் உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  கரூர் அருகே உள்ள வெங்கக்கல்பட்டி கிராமத்தில் இரு வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கக்கல்பட்டி கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு பிரிவினர்  தமிழ் புலிகள் கட்சியின் கொடிக்கம்பம் அமைக்க ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதே பகுதியில் வசித்து வரும் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடிக்கம்பம் அமைக்கும் இடத்திற்கு அருகில் தங்களுக்கு சொந்தமான முத்தாலம்மன் - பொம்முதேவர் கோவில் இருப்பதால் அவ்விடத்தில் கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதையும் படிங்க: மதுரையில் 389 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர்!


  இந்நிலையில், இரு பிரிவினருக்கிடையே தாசில்தார் தலைமையில் பீஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் அவ்விடத்தில் கொடிக்கம்பம் அமைக்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு தமிழ்புலிகள் கட்சியினர் கொடிக்கம்பத்தை அமைத்து கொடியை ஏற்றி உள்ளனர்.

  இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கரூர் - திண்டுக்கல் சாலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க: கொடநாடு என்பது ஒரு மர்மம்; நடந்த விஷயங்கள் எல்லாமே மர்மமாக தான் உள்ளது - கார்த்தி சிதம்பரம் எம்.பி


  Published by:Murugesh M
  First published: