• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும்: கரூரில் உருக்கமான கடிதம் எழுதிவைத்து +2 மாணவி தற்கொலை!

பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும்: கரூரில் உருக்கமான கடிதம் எழுதிவைத்து +2 மாணவி தற்கொலை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

  • Share this:
    கரூரில் பாலியல் வன்கொடுமை காரணமாக  12ம் வகுப்பு படித்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்நிலையில், மாணவி எழுதியுள்ள கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், “ இந்த பூமியில் வாழணும் ஆசபட்டேன். ஆனா இப்போ பாதியிலேயே போறேன். இன்னொறு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாதுல்ல “ என்று உருக்கமாக கூறியுள்ள சிறுமி, தனது தாய், சித்தப்பா, மாமா ஆகியோரை மிகவும் பிடிக்கும் என்றும், யாருக்கிட்டயும் சொல்லாம போகிறேன்,என்னை மன்னித்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  இனின் எந்த ஒரு பெண்ணும் தன்னை போன்று சாகக் கூடாது என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மாணவி எழுதிய கடிதம்


    இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் கடந்த வாரம் பள்ளி  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், சில தினங்களுக்கு முன்பு கோவையில் பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மேலும் ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: