• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கரூரில் பிரபல ரவுடி மர்ம கும்பலால் சுற்றி வளைத்து வெட்டிக் கொலை- காவல்துறை தீவிர விசாரணை

கரூரில் பிரபல ரவுடி மர்ம கும்பலால் சுற்றி வளைத்து வெட்டிக் கொலை- காவல்துறை தீவிர விசாரணை

கரூரில் கொல்லப்பட்டவர்

கரூரில் கொல்லப்பட்டவர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பிரபல ரவுடி மர்ம கும்பலால் சுற்றிவளைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வெளி மாவட்ட கூலிப்படையினர் கைவரிசையா ? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Share this:
    பழிக்குப்பழி கொலைச்சம்பவங்களை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள கருப்பத்தூரை சேர்ந்தவர் 54 வயதான கோபால். இவருக்கு பொன்மணி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். பிரபல ரவுடியான இவர் மீது கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    15 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை அடுத்த கருப்பத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து காயத்துடன் கோபால் உயிர் தப்பினார். இந்த நிலையில், அவரது தோட்டத்தில் நெல், வாழைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கு சென்றுள்ளார்.

    அப்போது, பக்கத்து தோட்டத்தில் மறைந்திருந்த 5 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் திடீரென கோபாலை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த லாலாபேட்டை போலீசார் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கோபால் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபல ரவுடி கோபாலை துணிச்சலாக அவரது விளை நிலத்தில் வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல் யார் ? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    முன்விரோதம் காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து கூலிப்படையை வரவழைத்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தப் படுகொலை அரங்கேறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: