ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீரஜ் என பெயர் வைத்திருந்தால் பெட்ரோல் இலவசம்: கரூரில் கலக்கல் ஆஃபர்!

நீரஜ் என பெயர் வைத்திருந்தால் பெட்ரோல் இலவசம்: கரூரில் கலக்கல் ஆஃபர்!

நீரஜ்

நீரஜ்

இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை சிறப்பிக்கும் வகையில், நீரஜ் என்ற பெயர் உள்ளவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  பெட்ரோல் பங்க் ஒன்று, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பெயர் வைத்திருப்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டொக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று மாபெரும் சாதனையை படைத்தார். அவரது சாதனைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கரூரில் இயக்கி வரும் பெட்ரோல் நிலையம் ஒன்று நீரஜை வேறு விதமாக சிறப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.  கரூர் திருமாநிலையூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரவிந்த் ஏஜென்சிஸ் என்ற பெட்ரோல் நிலையம் ,  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை சிறப்பிக்கும் வகையில், நீரஜ் என்ற பெயர் உள்ளவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பெயருக்கு ஆதாரமாக ஆதார் அடையாள அட்டையை காண்பித்து 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘எங்கே போனார் வேலுமணி’: எட்டு மணிநேரம் காணாமல் தவித்த காவல்துறையினர்!

இச்சலுகையை வரும்  வெள்ளிகிழமை வரை செயல்படுத்த உள்ளதாக அரவிந்த் ஏஜென்சிஸ் பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலையப்பசாமி தெரிவித்துள்ளார்.மேலும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரருக்கு சிறப்பு செய்யும் வகையிலும் இந்த சலுகையை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

செய்தியாளர்: கார்த்திகேயன்

இதையும் படிங்க: பிரியாணிக்கு கறி வாங்க கூட்டம் அலைமோதுற அளவுக்கு மவுசு - துறையூர் ஆடுகளுக்கு இப்படி ஒரு கதையா..?

First published: