Home /News /tamil-nadu /

முதல் பரிசு வாஷிங் மெஷின் 2-ம் பரிசு கிரைண்டர்.. கரூர் மக்களே தடுப்பூசி போடுங்க பரிசை அள்ளுங்க - ஆட்சியர் அறிவிப்பு

முதல் பரிசு வாஷிங் மெஷின் 2-ம் பரிசு கிரைண்டர்.. கரூர் மக்களே தடுப்பூசி போடுங்க பரிசை அள்ளுங்க - ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

முகாமில் தடுப்பூசி  செலுத்திக்கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    கரூரில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். 

    கரூர் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.  தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான காணொலி வாயிலாக  மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், கரூரில் வரும் 10ம் தேதி 5ம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இந்த முகாமின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீத இலக்கை எய்திடும் வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். அதற்காக வாக்குச்சாவடி அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலம் வந்த பிறகும் செலுத்தாதவர்களின் பெயர், முகவரி, அலைபேசி எண், ஆதார் எண் போன்ற விபரங்களை குறித்து வீடு வீடாக சென்று கணக்கெடுத்து சேகரிக்க வேண்டும்.

    Also Read:  நாங்க பார்த்துக்குறோம் நிலத்தை வித்துடுங்க.. பணத்தை சுருட்டிக்கொண்டு தந்தையை கைவிட்ட மகள்கள்

    ஒரு நபருக்கு 50 முதல் 60 வீடுகள் இலக்கீடாக வழங்கப்படலாம்.
    கணக்கெடுப்பாளர் தடுப்பூசி முகாமிற்கு எத்தனை நபர்களை அழைத்து வருகின்றார்களோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு நபருக்கு ரூ.5 வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், அன்றைய முகாமில் தடுப்பூசி  செலுத்திக்கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக துணி துவைக்கும் இயந்திரமும் (வாஷிங் மிஷின்),  2ம் பரிசாக கிரைண்டர், 3ம் பரிசாக மிக்ஸியும், 4ம் பரிசாக 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கு பாத்திரங்களும் வழங்கப்படவுள்ளது.

    25க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கணக்கெடுப்பின்போதே பரிசுகள் குறித்த விபரம் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்தப்படும் அன்று அந்த டோக்கன்களுடன் வருகை தர அறிவுறுத்த வேண்டும். 5ம் கட்ட முகாமின் மூலம் 100 சதவீத இலக்கை நமது மாவட்டம் பூர்த்தி அடைய வேண்டும். அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

    Also Read:  ஹெல்மெட் போடவில்லை.. கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவுக்கு மதுரையில் ஃபைன் போட்ட போலீஸார் - ஷாக்கான உரிமையாளர்

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், சிறப்பு வருவாய் அலுவலர் கவிதா, சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம்நிவாஸ், துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட அலுவர்கள் கூட்ட அரங்கிலும், மற்ற அனைத்துத்துறைகளின் அலுவலர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன் (கரூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covid-19 vaccine, Karur, News On Instagram, Tamilnadu

    அடுத்த செய்தி