Home /News /tamil-nadu /

பள்ளப்பட்டி: 27 வார்டுகளில் ஒன்றுக்கூட பட்டியலினத்தவருக்கு இல்லை

பள்ளப்பட்டி: 27 வார்டுகளில் ஒன்றுக்கூட பட்டியலினத்தவருக்கு இல்லை

பள்ளப்பட்டி நகராட்சி

பள்ளப்பட்டி நகராட்சி

பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்த போது 18-வார்டில், ஒரு வார்டு பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் ஒரு இடம் கூட பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்படவில்லை.

    கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ஒரு வார்டு கூட பட்டியலின இனத்தவருக்கு ஒதுக்கப்படாதது  பட்டியலின  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் 21 மாநகராட்சி,  138 நகராட்சிகள்,  490 பேரூராட்சி பகுதிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பேரூராட்சி அண்மையில் பள்ளப்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் வார்டு வரையறை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

    மொத்தம் உள்ள 27 வார்டுகளில் பொதுப்பிரிவு பெண்களுக்கு 14 வார்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பட்டியிலின மக்களுக்கு 1 வார்டு கூட ஒதுக்கப்படவில்லை.  பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்த போது 18-வார்டில், ஒரு வார்டு பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், தமிழகத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளில் பள்ளப்பட்டி நகராட்சியில் மட்டுமே பட்டியலின  மக்களுக்கு வார்டு ஒதுக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: திருச்சி மாநகராட்சி தேர்தல்: நான்கு இடங்கள் மட்டுமே ஒதுக்கியதால் காங்கிரஸ் அதிர்ச்சி


    மேலும் கரூர் மாநகராட்சி, குளித்தலை , புகழூர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் அனைத்திலும் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளப்பட்டியில் மட்டும் பட்டியலின மக்களுக்கு இட ஒதிக்கீடு வழங்காததால் பட்டியலின மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர்

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Karur, Local Body Election 2022

    அடுத்த செய்தி