• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தலைமை செயலாளரின் புத்தகத்தால் ஈர்ப்பு: புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பயணத்தை தொடங்கிய நபர்!

தலைமை செயலாளரின் புத்தகத்தால் ஈர்ப்பு: புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பயணத்தை தொடங்கிய நபர்!

சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணம்

இறையன்பு எழுதிய "பத்தாயிரம் மைல் பயணம்" என்ற புத்தகத்தில் இடம்பெற்ற "ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்திருக்க வேண்டும்" என்ற வரிகள் யோகேஸ்வரனுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இதையடுத்து புத்தக வழிப்புணர்வு பேரணியை அவர் தொடங்கியுள்ளார்.

  • Share this:
    புத்தக வாசிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த  கரூரில் இருந்து காஷ்மீர் மாநிலம் லடாக் வரை 11 மாநிலங்களை கடந்து 12 ஆயிரம் கிலோமீட்டர் நெடுந்தூர சைக்கிள் பயணத்தை புகைப்பட கலைஞர் ஒருவர் தொடங்கியுள்ளார்.

    கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார்.  சிறுவயதிலிருந்து புத்தக வாசிப்பின் மீது யோகேஸ்வரனுக்கு அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் இறையன்பு எழுதிய "பத்தாயிரம் மைல் பயணம்" என்ற புத்தகத்தில் இடம்பெற்ற "ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து இருக்க வேண்டும்" என்ற சீனப் பழமொழி இவருக்கு உத்வேகத்தை தந்துள்ளது.

    இறையன்பு எழுதிய அந்த புத்தகத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு பொதுமக்களிடத்தில் புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு அமைந்துள்ள தமிழ் சங்க காலப் புலவர்கள் நினைவுத்தூண் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

    இதையும் படிங்க: குழந்தைகள் இணைய அடிமையாவதை தடுக்க அரசு மருத்துவமனையில் ஆலோசனை வழங்கப்படும்: தமிழக அரசு


    காஷ்மீர் மாநிலம் லடாக் வரை 11 மாநிலங்களை கடந்து, 12,000 கிலோ மீட்டர் சுமார் நான்கு மாத காலம் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். இன்று தொடங்கிய இந்த சைக்கிள் பயணத்தில் இடையிடையே ஒவ்வொரு பகுதியிலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை சந்தித்து கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக யோகேஸ்வரன் தெரிவித்தார்.

    செய்தியாளர்: கார்த்திகேயன் -கரூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: