முன்விரோதம் காரணமாக இப்படியெல்லாம் கூட செய்வாங்களா: கொலை குற்றவாளி கைது!

முன் விரோதம்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைக்கும் போது, நான்கு ஆடுகள் குறைவாக இருப்பதை  சுப்பிரமணி கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து,  அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, கல்குவாரி பகுதியில் தேடிப் பார்த்தார்.

 • Share this:
  கரூர் அருகே முன்விரோதம் காரணமாக 4 ஆடுகளை கழுத்தை நெறித்து கொன்று கல் குவாரி குட்டையில் வீசிய ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கீழடை மாணிக்கபுரத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (45), இவருக்கு  சொந்தமாக 15க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.  தினமும்   காலையில் ஆடுகளை அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகில் மேய்ச்சலுக்கு விடுவதும், பின்னர் மாலையில் ஆடுகளை ஓட்டிவந்து பட்டியில் அடைப்பது வழக்கமாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நேற்று, வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைக்கும் போது, நான்கு ஆடுகள் குறைவாக இருப்பதை சுப்பிரமணி கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து,  அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, கல்குவாரி பகுதியில் தேடிப் பார்த்தார்.அப்போது, கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் நான்கு வெள்ளாடுகள் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது.  உடனே ஆடுகளை மீட்ட சுப்பிரமணி, இதற்கு காரணமானவர்கள் யாராக இருக்கும் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது, இவரது உறவினரான பெருமாள்(52) என்பவர் கல்குவாரி பகுதியிலிருந்து வெளியேறியது தெரிய வந்துள்ளது.

  இதையும் படிங்க: கடலூரில் யூ டியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்..

  இதையடுத்து, மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெருமாள்தான் முன்விரோதம் காணமாக ஆடுகளை கொன்று கல்குவாரியில் வீசியது தெரிய வந்தது.இதையடுத்து மாயனூர் போலீசார் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: கார்த்திகேயன், கரூர்
  Published by:Murugesh M
  First published: