திமுக ஆட்சி வந்தவுடன் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் 4000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால்
கரூர் சட்டமன்றத் தொகுதியில் 4,000 ரூபாய் உடன் சேர்த்து கூடுதலாக 1000 என 5000 ரூபாய் வழங்கப்பட்டது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகராட்சியாக இருந்த கரூர் முதன் முதலாக மாநகராட்சியாக மாற்றப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று வாக்கு சேகரித்தார்.
2வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வடிவேல் அரசுக்கு வாக்கு சேகரித்து குளத்துப்பாளையம் பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: கேஸ் விலை குறைப்பு என்னாச்சு? பிரச்சார கூட்டத்தில் பெண் எழுப்பிய கேள்விக்கு உதயநிதியின் பதில்
ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4000 ரூபாய் வழங்கினார். கரூர் சட்டமன்ற தொகுதியில் 4000 ரூபாய் உடன் சேர்த்து கூடுதலாக 1000 ரூபாய் என 5000 ரூபாய் வழங்கப்பட்டது என பேசினார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி வருவதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.