ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிக்னல் கிடைக்காததால் மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறிய நபர்

சிக்னல் கிடைக்காததால் மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறிய நபர்

செல்போன் கோபுரத்தில் ஏறிய நபர்

செல்போன் கோபுரத்தில் ஏறிய நபர்

தனது செல்போனில் டவர் கிடைக்கவில்லை என்று காரணத்திற்காக இளங்கோ தான் வேலை செய்துவரும் கடை அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு மேலுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் மதுபோதையில்  ஏறி உள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக மதுபோதையில் புத்தாண்டு தினத்தன்று செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞரால்  கரூஉரில் பரபரப்பு ஏற்பட்டது.

  கரூர் சின்னஆண்டான்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார்  இரும்புக் கடையில் வேலை செய்து வருபவர் இளங்கோ (44).

  புத்தாண்டு தினமான நேற்று இவர் மது  அருந்தியுள்ளார். அப்போது தனது செல்போனில் டவர் கிடைக்கவில்லை என்று காரணத்திற்காக அவர் வேலை செய்துவரும் கடை அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு மேலுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் மதுபோதையில்  ஏறி உள்ளார்.

  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புப் படையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் கரூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள், இளங்கோவுடன்  சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  திடீரென்று மழை பெய்ய துவங்கியதன் காரணமாக செல்போன் டவரில் ஏறியஇளங்கோ கீழே இறங்கினார். தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். மதுபோதையில் தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக இளைஞர் செல்போன் டவரில் ஏரிய சம்பவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

  செய்தியாளர்: கார்த்திகேயன்

  இதையும் படிங்க: 150 ஏக்கரில் தேங்கிய மழை நீர்: நெற்கதிர்கள் மூழ்கி ரூ.55 லட்சம் வரை நஷ்டம்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Alcohol, Karur