ரூ.2 கோடியில் தூர்வார வேண்டிய வாய்க்காலுக்கு ரூ.355 கோடியா? தமிழக அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

வாய்க்கால் தூர்வாரல்

 • Share this:
  கரூரில் ரூ.2 கோடியில் தூர் வார வேண்டிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு  கடந்த அதிமுக ஆட்சியில் காங்கிரீட் சுவர் அமைத்தல் என்ற பெயரில் ரூ.355 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,  தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

  கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையின் தென்கரை பகுதியில் தொடங்கும் கட்டளை மேட்டு வாய்க்கால்  சுமார் 67 கிலோ மீட்டர் தூரம் கடந்து திருச்சி தாயனூர் பகுதியை சென்றடைகிறது.   ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வாய்க்காலில்,  மாயனூர் கதவணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போதெல்லாம் வாய்க்காலில்  தண்ணீர் செல்லும்.

  இந்த கட்டளைமேட்டு வாய்க்கால் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதன் மூலம், நெல், கரும்பு, வாழை, வெற்றிலை கொடிக்கால் உள்ளிட்ட விவசாயம் ஆண்டு முழுவதும் செய்து விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பராமரிப்புக்காக சுமார் ரூ.2 கோடியில் இந்த வாய்க்காலை தூர் வாரியிருந்தாலே போதும், சுமார் 10 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்லும் வகையில் இந்த கட்டளை மேட்டு வாய்க்கால் மாறியிருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், அதிமுகவினரின் சொந்த ஆதாயத்திற்காக சுமார் 67 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலின் இரண்டு பக்கமும் காங்கிரீட் சுவர் மற்றும் காங்கிரீட் தளம் அமைக்க திட்டமிட்ட அதிமுக அரசு, இதற்காக  ரூ.335 கோடிக்கு நிதி ஒதுக்கி, அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ஈரோடு ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்த பணியை ஒதுக்கியது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கட்டுமான பொருள் விலைவாசி உயர்வு என்ற பெயரில் மேலும் கூடுதலாக ரூ 20 கோடி ஒதுக்கப்பட்டு ரூ. 355 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இதையும் படிங்க: வாகனங்களை திருடியதும் பார்ட் பார்டாக கழற்றி விற்பனை: இருவர் கைது...

  ரூ. 2 கோடியில் தூர் வார வேண்டிய இந்த கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு ரூ.355 கோடி செலவா?  என அதிர்ச்சி அடையும் விவசாயிகள் இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்றும், அவசர கதியில் விவசாயிகளின் கருத்தைக் கூட கேட்காமல் இந்த கான்கிரீட் சுவர் மற்றும் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர் ஊற்றுக்கு வழி இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், வாய்க்காலில் இருபுறமும் காங்கிரீட் சுவர் கட்டுவதால் வாய்க்காலில்  ஆடு, மாடுகள் முதல் மனிதர் வரை யார் தவறி விழுந்தாலும்  கரை ஏற முடியாமல் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என அச்சமடைந்துள்ளனர்.

  மேலும் படிக்க: குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அறக்கட்டளை:  குழந்தைகள் பத்திரமாக மீட்பு!


  எனவே, தமிழக அரசு இது குறித்து விசாரணை மேற்கொண்டு ரூ.355 கோடி நிதியை பயனுள்ள திட்டப் பணிக்கு செலவிட வேண்டும் என கேட்டுக் கொண்ட விவசாயிகள், கட்டளை  வாய்கால்களில் சுமார் 500 சிறு பாலங்கள் உள்ளது. இதை சீரமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
  மேலும், ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்  கடைமடை பகுதிக்கு சென்றடைந்து விட்டது. ஆனால், கட்டளைமேட்டு வாய்க்கால் சிமெண்ட் தளம் அமைக்கும் பணியால் மாயனூர் கதவணை ஒட்டியுள்ள பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: கார்த்திகேயன்
  Published by:Murugesh M
  First published: