முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நீட் என்னும் அநீதிக்கு விரைவில் முடிவு கட்டப்படும்: ஜோதிமணி

நீட் என்னும் அநீதிக்கு விரைவில் முடிவு கட்டப்படும்: ஜோதிமணி

ஜோதிமணி

ஜோதிமணி

மாணவர்கள் தைரியமாகவும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.  ஒரு தேர்வு நம்முடைய வாழ்க்கையை தீர்மானித்து விடாது. நீட் தேர்வு நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடி கொண்டுள்ளோம். நிச்சயமாக நீட்  அநீதிக்கு ஒருநாள் முடிவு கட்டப்படும் என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 India
  • 1-MIN READ
  • Last Updated :

நீட் தேர்வு மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட அநீதி என்றும் இந்த அநீதிக்கு  விரைவில் முடிவு கட்டப்டும் என்றும்  கரூர் எம்பி ஜோதிமணி  தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் உயிரை மாய்த்துகொள்ளும் துயரம் தமிழகத்தில் இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது.  இதுவரை 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இத்தகைய விபரீத முயற்சியை மாணவர்கள் எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அண்மையில் சட்டப்பேரவையில்நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றியது.

இந்நிலையில், நீட்  தேர்வு திணிக்கப்பட்டுள்ளதாக கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

மூன்று சக்கர வாகனத்தை வழங்கிய  கரூர் எம்.பி.ஜோதிமணி பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது கவலைக்குரியது. மாணவர்கள் தைரியமாகவும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.  ஒரு தேர்வு நம்முடைய வாழ்க்கையை தீர்மானித்து விடாது. நீட் தேர்வு நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடி கொண்டுள்ளோம். நிச்சயமாக நீட்  அநீதிக்கு ஒருநாள் முடிவு கட்டப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரிசுப் பொருள் என்ற பெயரில் வந்த பொருட்களை பார்த்து திகைத்த சுங்கத்துறை அதிகாரிகள்!

தொடர்ந்து தமிழ்நாட்டில் நீட் தேர்வு புறக்கணிக்கப்படுவதாக கூறிய அவர், “தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்தும், மத்திய அரசாங்கத்தால் நீட் தேர்வு திணிக்கப்க்கப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனை என்று 3 செங்கலை வைத்து விட்டு 3 ஆண்டுகளாக இருக்கிறார்கள். அதே போல தான் மற்ற மாநிலங்களில் மோசமான ஆட்சியை பாஜக கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Congress, Jothimani, Neet Exam