Home /News /tamil-nadu /

ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் - கரூரில் பரபரப்பு

ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் - கரூரில் பரபரப்பு

Lalapet railway station

Lalapet railway station

ரயில்வே கேட்டை கடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்ற மிரட்டல் கடிதத்தால், மோப்ப நாய் வரவழைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    லாலாபேட்டையில் நிரந்தரமாக மூடியுள்ள ரயில்வே கேட்டை திறக்கவில்லை என்றால் ரயில் நிலையத்தை வெடிக்குண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் கடிதத்தால் பரப்பரப்பு ஏற்பட்ட நிலையில், திருச்சி ரயில்வே டிஎஸ்பி எட்வேர்ட், கரூர் மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் கேண்டி மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கரூர் - திருச்சி சாலை லாலாபேட்டையில் உள்ள ரயில்வே கேட்டால் அதிக போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஊரிலிருந்து சற்று தொலைவு தள்ளி புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் அங்குள்ள ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.

    Also read:   அரசியல்வாதி மீது செக்ஸ் புகார் எழுப்பிய சீன டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மாயம்! - அதிர்ச்சியில் சக நட்சத்திர வீராங்கனைகள்

    இதனால், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு ரயில்வே கேட்டை கடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து ரயில்வே கேட் அருகே சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்டது. அந்த பாதையில் நகரப்பேருந்துகள் சென்று திரும்ப முடியாத வகையில் பாதை அமைந்ததால் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இரண்டு புறங்களிலும் பாசன வாய்க்கால்கள் செல்வதால் தண்ணீர் ஊற்று ஏற்பட்டு முழங்கால் அளவிற்கு எந்த நேரமும் தண்ணீர் நின்று கொண்டே இருக்கும். மேலும் மழை காலங்களில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

    Also read:   மாவட்ட நீதிபதி மீது போலீசார் திடீர் தாக்குதல் - வழக்கு விசாரணையில் நடுவே பரபரப்பு சம்பவம்..

    இந்நிலையில் லாலாபேட்டை ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக ரயில்வே கேட்டை திறக்க வேண்டும். இல்லை என்றால் லாலாபேட்டை ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என லாலாபேட்டை ரயில் நிலைய அலுவலருக்கு நேற்று தபால் வந்துள்ளது. நேற்று பணியிலிருந்து அலுவலருக்கு தமிழ் தெரியாததால் கடிதத்தை ஓரமாக வைத்துள்ளார். இன்று காலையில் தமிழ் தெரிந்த அலுவலர் வந்து படித்தபிறகு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    அதை தொடர்ந்து திருச்சி ரயில்வே டிஎஸ்பி எட்வேர்ட் தலைமையில் திருச்சி, கரூர் ரயில்வே போலீசார் மற்றும் கரூர் மாவட்ட வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர், துப்பறியும் நாய் கேண்டி மூலம் லாலாபேட்டை ரயில் நிலையத்தில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    ரயில்வே கேட்டை திறக்கவில்லை என்றால் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என வந்த மொட்டை கடிதத்தால் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Published by:Arun
    First published:

    Tags: Hoax bomb threat call, Karur

    அடுத்த செய்தி