Home /News /tamil-nadu /

கரூர் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா - மாணவர்களுக்கு பரிசோதனை செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்

கரூர் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா - மாணவர்களுக்கு பரிசோதனை செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்

கரூர் அரசுப் பள்ளி

கரூர் அரசுப் பள்ளி

கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு  கணித பாடம் எடுக்கும் கணித ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆசிரியை கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் இருந்து தினசரி பேருந்து மூலம் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து செல்கிறார். லேசான காய்ச்சல் அறிகுறியுடன் இருந்ததால், கடந்த வியாழக்கிழமை அன்று கணித ஆசிரியை ஒரு நாள் விடுப்பு எடுத்து உள்ளார். தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று பள்ளிக்கு வந்த அவருக்கு காய்ச்சல், சளி அறிகுறி அதிகமாக இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை முதல் இன்று வரை அந்த கணித ஆசிரியையுடன் தொடர்பில் இருந்த 20க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் மற்றும் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இதுவரை கொரோனோ பரிசோதனை செய்யப்படவில்லை.

கரூர் அரசுப் பள்ளி


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டும் மற்றவர்களுக்கு பரிசோதனை செய்யாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்தியாளர்: கார்த்திகேயன்
Published by:Karthick S
First published:

Tags: CoronaVirus, Karur

அடுத்த செய்தி