சடலத்தை ஒப்படைக்க பணமா? கரூர் அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சடலத்தை ஒப்படைக்க பணமா? கரூர் அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
அரசு மருத்துவமனையில் லஞ்சம்
Karur District : கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாநகரமான காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சைக்கு வருபவர்களிடம் கடைமடை ஊழியர் முதல் மருத்துவர் வரை லஞ்சம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும் போது உறவினர்களிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் விபத்து நடந்த காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட காவல் துறையினர் உடலை பெற்றுக் கொள்ளும் போது இறந்த உறவினரிடம் வற்புறுத்தி காவல்துறையினர் லஞ்சம் பெற்று கொண்டு மற்றும் உடல் பிரேத பரிசோதனை செய்த பிணவறை ஊழியர்களிடம் பணம் கொடுக்கச் சொல்லி கூறியுள்ளனர்.
உறவினர் உடலைப் பெற்றுக்கொண்டு பிணவறையில் வேலைபார்த்த ஒருவரிடம் லஞ்சமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் மற்றும் கொசு வலை தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் தினக்கூலியாக பல லட்சம் மக்கள் வேலை பார்த்து வருகின்றனர். வேலை முடிந்து வீடு திரும்பும் நிலையிலும் மற்றும் வேலைக்கு வரும் நிலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் விபத்தில் சிக்குபவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நம்பியே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை நன்றாக இருந்தாலும், சிகிச்சைக்கு வருபவர்களிடம் கடைமடை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளும்போது லஞ்சம் பெற்ற இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.