ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் குளறுபடி.. மூட்டைக்கு 27 ரூவா கேட்கும் அதிகாரிகள்.. நெல் கொள்முதலில் மெத்தனம் கரூர் விவசாயிகள் கண்ணீர்

ஆன்லைன் குளறுபடி.. மூட்டைக்கு 27 ரூவா கேட்கும் அதிகாரிகள்.. நெல் கொள்முதலில் மெத்தனம் கரூர் விவசாயிகள் கண்ணீர்

விவசாயிகள் வேதனை

விவசாயிகள் வேதனை

Karur District : கரூர் மாவட்டத்தில்  இரவு முழுவதும் பெய்த கனமழையால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,   நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம். விவசாயிகள் கவலை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பதிவு செய்து 20, 30 நாட்களுக்கு மேலாகியும் தங்களது நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் செயல்படுகிறது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவகுளம் மற்றும் கட்டளையில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது.ஆனால் இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விவசாயிகள் தங்களது நெல் மணிகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினாலும், 21ம் தேதி இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நெல் மூட்டைகள், தார்ப்பாய் மூலம் மூடி வைத்திருந்த நெல்மணிகள் நனைந்து சேதமாகி உள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் , அரசாங்கம் நேரடி கொள்முதல் நிலையம் எங்க ஊரில் போட்ருக்காங்க. இந்த ஏரியாவில் இருக்கும் விவசாயிகள் எல்லாருமே இங்க தான் வந்து நெல்லை விற்பனை செய்து கொண்டு இருக்கிறோம். வருஷம் வருஷம் நாங்க இங்க நெல்லை கொட்டிட்டு போய் இங்க இருக்குற அதிகாரிங்க கிட்ட எங்களோட பெயரை பதிவு செய்து , எங்களுக்கு முன்னாடி யாரு இருக்கா, பின்னாடி யாரு இருக்கா என தெரிந்து கொண்டு போனதால சரியா அளந்துட்டு போய்கிட்டு இருந்தாங்க. இந்த வருஷம் ஆன்லைன் புக்கிங் சொன்னதால , ஆன்லைன்ல புக் பண்ணத் தெரியாத பல படிப்பறிவற்ற விவசாயிகள் தவிச்சுட்டு இருக்கோம்.

புக் பண்ணவங்களும் அங்க வேலை செய்கிற அதிகாரிகளை எப்படி கவனிக்கணுமோ அப்படி முறைகேடா கவனிச்சு அளந்துட்டு போய்டாங்க. அரசாங்கம் பணம் தரவேணாம் என கூறியிருக்கு. ஆனா நாங்க மூட்டைக்கு 27 ரூபாய் கொடுத்து அளந்துட்டு இருக்குறோம். அப்படி குடுத்து அளந்தாலும் எங்களுக்கு சரியான படி அளக்கல ஒரு மாசமா கொட்டி வச்சிருக்கோம். பாருங்க நேத்து பெஞ்ச மழைல இன்னைக்கு எல்லாம் முளைப்பு வந்துருச்சு. இன்னைக்கு நைட்டு மழை பெஞ்சா என்ன ஆகும்னு தெரியல.

ஏற்கனவே விவசாயம் பண்றவன் வேற வழி இல்லாமல் , வேற தொழில் தெரியாமல் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கான். ஏகப்பட்ட நட்டத்துல, இதுமாதிரி நடந்துச்சுனா நாங்க என்ன பண்றது நாங்க தற்கொலை பண்ணிக்கிட்டு சாக வேண்டியது தான். விவசாயிகள் தற்கொலை, பணிக்கிறாங்க காரணம் என்ன இது மாதிரி நடக்குறதுனால தான்.

அரசு ஏதாவது எங்களுக்கு உரிய முயற்சி எடுத்து , இந்த முறைகேடு தடுக்க ஏதாச்சும் வழி இருக்குதானு , எங்களுக்கு ஒரு போர்டு மாறி போட்டு , எங்களுக்கு ஆன்லைன் மெசேஜ் சரியா வரமாதிரி , இங்க எழுதி போட்டு பண்ணா மட்டும் தான் இந்த முறைகேட்டை தடுக்க முடியும். நைட்டு வந்து அளந்துட்டு அளந்துட்டு போறாங்க யாருக்கு அளக்குறாங்க எதுக்கு அளக்குறாங்க ஒன்னும் தெரியல. பயங்கரமான முறைகேடு இங்க நடக்குது. இன்னைக்கு நைட்டு மழை பெஞ்சா நாங்க சின்ன சின்ன விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிட்டு நாங்க சாக வேண்டியது தான் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு ஆன்லைன் பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகளை நீக்கி கட்டளையில் சேமிப்புக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதேபோல் கோவக்குளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

செய்தியாளர் : தி.கார்த்திகேயன் (கரூர்)

First published:

Tags: Farmers, Karur