மரத்திலேயே அழுகி வீணாகும் வாழைகள்: ஊரடங்கால் விவசாயிகள் கடும் பாதிப்பு!

வாழை விவசாயிகள் வேதனை

கடந்த  ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கால் வாழை விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது - இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கால் வாழை விவசாயம் பாதிப்படைந்து விட்டது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

 • Share this:
  ஊரடங்கு காரணமாக  வாழைகளை விற்க முடியாமல் விவசாயிகள்  தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக மரத்திலேயே வாழைகள் அழுகி வீணாகி வருகின்றன.

  கரூர் மாவட்டத்தில், குளித்தலை , கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, மகாதானபுரம், பிச்சம்பட்டி, வேலாயுதம்பாளையம், நெரூர், புகளூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுமார் 7500 ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

  இதில், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை குளித்தலை போன்ற பகுதியில் உள்ள சுமார் 2500 ஏக்கரில் நடப்பட்ட வாழைகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாகவும், திருவிழா, சந்தை, திருமண விஷேசம், கடைகள் எதுவும் இல்லாததால் வாழை பழங்கள் சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், நெரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் காவிரி மற்றும் வாய்க்கால் பாசனத்தில் உள்ள சுமார் 2000 ஏக்கரில் உள்ள வாழைகள் அறுவடை செய்து சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரூ 375 க்கு விற்கப்பட்ட ஒரு தார் வாழை பழம் இன்று ரூ 50 க்கு கேட்க ஆள் இல்லாமல் போனது. வாழை பழங்களை மக்களுக்கு இலவசமாகவும் கொடுத்தும் தீராததால் மரத்திலேயே பழங்கள் அழும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: மிலிட்டரி கேன்டீனில் மதுபாட்டில்கள் வாங்க குவிந்த ராணுவ வீரர்கள்... சீல் வைத்த அதிகாரிகள்..

  ஒரு ஏக்கரில் வாழை சாகுபடி செய்ய சுமார் ரூ 1.50 லட்சம் முதல் 2, லட்சம் வரை ஏற்படுவதாக கூறும் விவசாயிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக செலவு செய்த முதலீட்டைக் கூட எடுக்க முடியாமல் போனதாக தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த  ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கால் வாழை விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது - இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கால் வாழை விவசாயம் பாதிப்படைந்து விட்டது என வேதனை அடைந்துள்ளனர்.

  கடந்தாண்டு 8 ஏக்கர் சாகுபடி செய்ததில்,  கொரோனா ஊரடங்கால் சாகுபடி செய்த முழுவதுமாக பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு இரண்டு ஏக்கர் மட்டுமே வாழை சாகுபடி செய்ததாக கூறும் விவசாயி ஒருவர், கரூரில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால்,   வாழையை  அறுவடை செய்து சந்தைப்படுத்த முடியாமல் போவதாக தெரிவித்துள்ளார்.

  எனவே, கொரோனா ஊரடங்கு காரணமாக நஷ்டமடைந்துள்ள வாழை விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது, முதல் வாழை நாசமானதை தொடர்ந்து இரண்டாவது வாழையையாவது காப்பாற்ற அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  Published by:Murugesh M
  First published: