Home /News /tamil-nadu /

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த உறுதுணையாக இருங்கள்.. மக்களிடம் கோரிக்கை வைத்த மாவட்ட ஆட்சியர்

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த உறுதுணையாக இருங்கள்.. மக்களிடம் கோரிக்கை வைத்த மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்

மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்

Karur District : அரசுப் பள்ளிகள், மக்களாகிய உங்களுடைய பள்ளி. பள்ளியின் தரத்தையும் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் நடவடிக்கைகள், கல்வி தரம் உயர்த்த வேண்டும் அதற்கு மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்கவும் ...
    அரசுப் பள்ளிகள், மக்களாகிய உங்களுடைய பள்ளி. பள்ளியின் தரத்தையும் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் நடவடிக்கைகள், கல்வி தரம் உயர்த்த வேண்டும் அதற்கு மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேட்டுக் கொண்டார்.

    கரூர் மாவட்டம்,  கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை மேல்நிலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்புக் குழு குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்  பெற்றோர்களிடையே கலந்துரையாடினார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மை மறுசீரமைப்பு குழு குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசும்போது, பள்ளி மேலாண்மை குழுவில் 15 பெற்றோர்களும், தலைமையாசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர் என 5 பேர் உட்பட 20 பேர் இடம் பெறுவர்.



    இந்த பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கமானது பள்ளி கட்டிட வசதிகள், குழந்தைகளின் கல்வி, சத்துணவு, கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆசிரியர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு அதனை நிறைவேற்றி தருவதில் கவனம் செலுத்த வேண்டும்.  இந்த பள்ளி மேலாண்மை குழு ஆனது பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவது நோக்கமாகும்.

    இதையும் படியுங்கள் :  சடலத்தை ஒப்படைக்க பணமா? கரூர் அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் சீரமைக்கப்படாத இந்த பள்ளி மேலாண்மை குழுவானது ஏப்ரல் மாதம் புதிதாக பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அரசுப் பள்ளிகள், மக்களாகிய உங்களுடைய பள்ளி. பள்ளியின் தரத்தையும் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் நடவடிக்கைகள், கல்வி தரம் உயர்த்த வேண்டும் அதற்கு மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேட்டுக் கொண்டார்.

    தி.கார்த்திகேயன், செய்தியாளர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Government school, Karur

    அடுத்த செய்தி