Home /News /tamil-nadu /

கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்த்த கவிதா கணேசன்  போட்டியின்றித் தேர்வு

கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்த்த கவிதா கணேசன்  போட்டியின்றித் தேர்வு

கரூர் மாவட்டத்தில் உள்ள   கரூர் மாநகராட்சி,  3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

கரூர் மாவட்டத்தில் உள்ள   கரூர் மாநகராட்சி,  3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

கரூர் மாவட்டத்தில் உள்ள   கரூர் மாநகராட்சி,  3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்த்த கவிதா கணேசன்  போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த  மறைமுகத் தேர்தலை 2 அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்தனர். 4 மணி நேரத்திற்குப் பிறகு செங்கோல் வழங்கி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள   கரூர் மாநகராட்சி,  3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.
கரூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 48 வார்டுகளில், 43  இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.   காங்கிரஸ் 2 இடத்திலும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

கரூர் மாநகராட்சியின் மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் திமுக சார்பில் 22 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  போட்டியிட்ட அனைத்து பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து முதல் பெண் மேயர் யார் என பலராலும் பரபரப்பாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வந்தற்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க - கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவியேற்றார் கல்பனா... மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் என உறுதி

கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக வேட்பாளராக கவிதா கணேசன் எம்எஸ்சி., பிஎட் படித்தவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் ஏற்கெனவே இனாம் கரூர் நகராட்சியின் தலைவராக 5 ஆண்டு காலம் இருந்தவர். இவரது கணவர்  கணேசன். திமுக தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார்.

கரூர் மாநகராட்சியில் இன்று மேயர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில்  மாநகராட்சியின் மேயர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவிதா கணேசன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மற்றவர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்,  போட்டியின்றி அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க - தேர்தலை நடத்த விடாமல் திமுகவினர் அத்துமீறல் - எஸ்.பி.வேலுமணி புகார்

பின்னர் மேயருக்கான இருக்கையில் கவிதா கணேசனை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அமர வைத்தார். திமுக நிர்வாகிகள் மாநகராட்சி மேயருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் அப்போது மேற்கூறிய செங்கோல், சிவப்பு  கோர்ட் கொடுக்கவில்லை. நான்கு மணி நேரத்திற்கு பிறகு இரண்டு மணிக்கு மேல் தான் செங்கோல் கொடுத்து பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

காலையில் நல்ல நேரம் முடிந்துவிட்டதால் செங்கோல் கொடுத்து பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மதியம் 2 மணிக்கு மேல் நல்ல நேரம் பார்த்து மேயராக பதவி ஏற்றுக் கொண்டதாக பேசப்படுகிறது. தொடர்ந்து துணை மேயராக தாரணி சரவணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் இரண்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

செய்தியாளர் - தி. கார்த்திகேயன், கரூர்
Published by:Musthak
First published:

Tags: Karur, Local Body Election 2022

அடுத்த செய்தி