முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கரூர் ஆட்சியரை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி போராட்டம் - மத்திய அரசின் திட்டத்தை தடுப்பதாக குற்றச்சாட்டு!

கரூர் ஆட்சியரை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி போராட்டம் - மத்திய அரசின் திட்டத்தை தடுப்பதாக குற்றச்சாட்டு!

Jothimani MP

Jothimani MP

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி- யிடம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கைகூப்பி வணங்கி, முகாம் நடந்து கொண்டிருக்கிறது. தயவுகூர்ந்து வாங்க  செல்லலாம் என கேட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆளும் திமுக அரசின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் உபகரணங்கள் வழங்க உடனடியாக முகாம் நடத்த கோரி காங்கிரஸ் எம்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

திடீர் போராட்டம் குறித்து ஜோதிமணி எம்.பி தெரிவித்ததாவது,

கரூர் பாராளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி ஆற்ற விடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாகவும், மேலும் மற்ற மாவட்டங்களில் திமுக எம்பி கனிமொழி இருந்த அந்த நாடாளுமன்றத் தொகுதியில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் கரூர் மாவட்டத்தில் கமிசன் அடிப்படையில் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே, இந்த திட்டம் மூலமாக வரக்கூடிய பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை கிடைக்கவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டினார்.

ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை? இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்தியுள்ளார். கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?

Also read:  சமந்தாவுக்கு முன் ஸ்ருதிஹாசனை திருமணம் செய்ய விரும்பிய நாகசைத்தன்யா?

மத்திய அரசின் திட்டத்தை தடுக்கிறார்:

மேலும், இந்த சிறப்பு முகாம் நடத்த கோரி கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியும் அவர் கண்டுகொள்ளவில்லை.

மத்திய அரசு மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தடுத்து வருவதாகவும் உடனடியாக இந்த சிறப்பு முகாம் எப்போது நடத்தப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே இந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவேன் எனக் கூறி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஈடுபட்டு வருகிறார்.

கைகூப்பி வணங்கிய மாவட்ட ஆட்சியர்:

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி- யிடம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கைகூப்பி வணங்கி, முகாம் நடந்து கொண்டிருக்கிறது. தயவுகூர்ந்து வாங்க  செல்லலாம் என கேட்டார்.

Also read:  செய்தி வீடியோ வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு கூகுள் கிடுக்கிப்பிடி.. ஜனவரி முதல் புதிய விதி...

ஊழல் அதிகாரி என விமர்சனம்:

முகாமை எப்போது நடத்துவீர்கள் என பதில் கூறுங்கள் பிறகு வருகிறேன். இல்லை என்றால் எனது போராட்டம் தொடரும் என தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார்.

ஆட்சி மாறினாலும் ஊழல் அதிகாரிகள் மாறவில்லை. ஊழல் நடைபெற்று வருகிறது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு தெரிவித்தார்.

செய்தியாளர் கார்த்திகேயன் - கரூர்

First published:

Tags: Congress, Jothimani, Karur